அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, October 8, 2017

தமுமுக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

காரைக்கால், நகரம் முழுவதும்

தமுமுக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
++++++++++++++++
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, அதில் நூற்றுக்கணக்கானோர் இறந்து வரும் நிலையில் சமூக சேவையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தமுமுக டெங்கு வியாதியிலிருந்து மக்களை காக்க அக்டோபர் மாதத்தை டெங்கு ஒழிப்பு மாதமாக அறிவித்து, டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காரைக்கால் நகர தமுமுக சார்பாக, காரைக்கால் நகரத்திற்குட்பட்ட  வாராந்திர காய்கறி சந்தை மற்றும் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முஹம்மது யூசுப் தலைமை வகித்தார், மாநில செயலாளர் அலாவுதீன், மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன், மமக மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 3000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர பொருளாளர் முஹம்மது இக்பால் தலைமையில் மமக நகர துணை செயலாளர் அஷ்ரப் அலி உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மமக மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, மருத்துவசேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ் தொண்டரணி மாவட்ட செயலாளர் யூசுப் என்ற முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Read more...

Friday, September 29, 2017

காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகம் தேர்வு

காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகம் தேர்வு

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் நகர பொதுக்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம், தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மாநில பொறுப்பாளர் அலாவுதீன் சிறப்பு  அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி மற்றும் இயக்க செயல்பாடுகள்  குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்து காரைக்கால் நகர புதிய நிர்வாகிகள் தேர்வை நடத்தினார்.

இக்கூட்டத்தில் ஹாஜா மெய்தீன் நகர தலைவராகவும், முஹம்மது  இப்ராஹிம் நகர செயலாளராகவும், முஹம்மது இக்பால் நகர பொருளாளராகவும், முஹம்மது யூசுப் தமுமுக நகர செயலாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஹம்மது மாசிம் , தமுமுக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மெய்தீன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர்  முஹம்மது நஜிமுதீன், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர்  செய்யது புஹாரி, விளையாட்டு அணி மாவட்ட  செயலாளர்  முஹம்மது சர்புதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது  பயாஸ், மாவட்ட தொண்டரணி செயலாளர்  யூசுப் என்ற முத்து ஆகியோர் உட்பட காரைக்கால் நகரத்திற்குட்பட்ட காரை மேற்கு, காரை கிழக்கு, எஸ்.ஏ.நகர் மற்றும் கோவில்பத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதென முடிவு செய்யப்பட்டது.

1. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையினை தரம் உயர்த்தவும், மருத்துவமனைக்கு தேவையான அளவு ஊழியர்களை நியமனம் செய்யவும், தேவையான மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் கையுருப்பில் வைத்திருக்கவும் வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

2. காரைக்கால் பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள இலவச அரிசியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

3. காரைக்கால் பகுதியில் சாலைகளில் திரியும் நாய்கள், மாடுகள் மற்றும் பன்றிகளால் சாலைகளில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாகவும், வாகனங்கள் விபத்திற்குள்ளாகுவதும், பல்வேறு வியாதிகளும் உருவாகின்றன. ஆகவே, நாய், மாடு மற்றும் பன்றிகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்வதுடன், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், மனித நலனுக்கு எதிராகவும் நாய்களை பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

4. புதுச்சேரி மின் துறையால் வீடுகள் மற்றும் கடைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மின் பட்டியலின் தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் மின் பட்டியலில் உள்ள கட்டணத்தை மின் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஆனால், காரைக்கால் மேற்கு பகுதியில் மட்டும் மின் பட்டியல் தேதியிலிருந்து 10 தினங்கள் கழித்து மின் கணக்கெடுத்து வீடுகளுக்கு மின் பட்டியல் வழங்குவதால், மின் பட்டியல் வழங்கிய 6 தினங்களுக்குள் மின் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாக்கப்படுகின்றனர். மேலும், ஒரு மாதம் கழித்து மின் பட்டியல் எடுப்பதால் மின் அளவு அதிகமாகி, மின் தொகையும் அதிகமாகிறது. மக்களை பற்றி சிந்திக்காமல், அலட்சிய போக்குடன் செயல்படும் மின் துறையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

5. வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள மின் மீட்டர் பழுதாகினால், அதனை மின் கணக்கெடுப்பாளர் கணக்கெடுத்து, மின் அலுவலகத்தில் தெரிவித்து மின் துறையே நேரடியாக ஓடாத மீட்டர்களை மாற்ற வேண்டும், ஆனால், மின்துறை நிர்வாகம் அப்பணியை செய்யாமல் மக்களையே மின் மீட்டர் ஓடவில்லை என புகார் மனு கொடுக்க வற்புறுத்துவதை கண்டிப்பதுடன், மின் மீட்டர்களை தேவையான அளவு காரைக்கால் பகுதிக்கு வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

6. புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அரசு துறைகளின் அனைத்து திட்டங்களும் முழுமையாக கணினிப்படுத்தப்பட்டு விட்டதாக அரசு அறிவித்து வரும் வேலையிலும், புதுச்சேரி மாநிலத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வழங்கப்படும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் நிலையில் காரைக்கால் நகராட்சியில் மட்டும் 1970 வருடத்திற்கு முன்புள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் ஆன்லைனில் வழங்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டுவதுடன், உடனடியாக காரைக்கால் நகராட்சியில் அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளையும் ஆன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

Read more...

Tuesday, August 15, 2017

காரைக்காலில் - தமுமுக இரத்ததான முகாம்

 இந்தியாவின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 15.08.2017 அன்று காரைக்கால் மாவட்ட அலுவலகத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ் தலைமையில் நடைபெற்றது, இரத்ததான முகாமினை மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் துவக்கி வைத்தார், மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்,


 காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசனா, புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் நாஜிம், காரைக்கால் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் முஹம்மது யாசின், காரைக்கால் வக்ப் நிர்வாக சபை தலைவர் அபூபக்கர், காரைக்கால் வக்ப் நிர்வாக சபை செயலாளர் செல்லாப்பா என்ற அப்துல் ரஹ்மான், அஞ்சுமன் இஸ்லாமிய சங்க தலைவர் ஆடிட்டர் சாகுல் ஹமீது, சமூக ஆர்வலர்கள் ஜாஹிர் ஹுசைன், சேத்தான் என்ற அஹமது மெய்தீன், திருப்பட்டினம் முத்தவல்லி ஆசிக் அஹமது, பாமக சுரேஷ் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 
 நிகழ்ச்சிக்கு மாவட்ட  செயலாளர் கமால் ஹுசைன், மமக மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மெய்தீன், மமக மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஹம்மது ஆசிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.





 முகாமிற்கான ஏற்பாடுகளை அரசு இரத்த வங்கி வின்சென்ட், சாந்தி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


 நிகழ்ச்சியில் ஜித்தா மேற்கு மண்டல தமுமுக தலைவர் அப்துல் மஜீது, இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் ஹாஜா நஜிமுதீன், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன்,  மாணவரணி மாவட்ட செயலாளர் சதாம் ஹுசைன், விளையாட்டு அணி மாவட்ட  செயலாளர் முஹம்மது சர்புதீன், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் @ முத்து, நகர பொருளாளர் சிக்கந்தர், நகர முன்னாள் தலைவர் ஜெகபர் சாதிக், நிர்வாகிகள் ஹாஜா மெய்தீன், முஹம்மது இப்ராஹிம், முஹம்மது ரியாஸ், உட்பட நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்.

Read more...

Sunday, August 13, 2017

திரு-பட்டினத்தில் ....மனிதநேய மக்கள் கட்சியின் சுதந்திர தின பொதுக்கூட்டம்

காரைக்கால் மாவட்டம், திரு-பட்டினம் கிளை சார்பாக திரு-பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சுதந்திர தின பொதுக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் முஹம்மது ஆஷிக் தலைமை வகித்தார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹாஜா நஜிமுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார், ஜித்தா மேற்கு மண்டல தமுமுக தலைவர் அப்துல் மஜீத், மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மாசிம், தமுமுக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மெய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியா எங்கள் தாய் நாடு - இஸ்லாம் எங்கள் வழிபாடு என்ற எழுச்சி பாடலை மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி பாடினார்.,





மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது சுதந்திர இந்தியாவும், இன்றைய நிலையும் என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார், தமுமுக மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன், மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம்   மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.



கிளை செயலாளர் முஹம்மது தாரிக் நன்றியுரையாற்றினார், பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கிளை பொருளாளர் அபூபக்கர், நிர்வாகிகள் ஹாஜா ஜெகபர் சாதிக், ஹாஜா ஷேக் அலாவுதீன், ரிஸ்வான், பவாஜ், ஜெகபர் சாதிக், முஹம்மது நஜீர், அன்வர் ஹுசைன், அமீருதீன் ஆகியோர் செய்திருந்தனர்.


 பொதுக்கூட்டத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன்,  விளையாட்டு அணி மாவட்ட  செயலாளர் முஹம்மது சர்புதீன், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் @ முத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



மேலும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது.

தீர்மானங்கள்

1. திரு-பட்டினத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், திரு-பட்டினம் பெரியப்பள்ளி அருகில் புதிய நீர் தேக்க தொட்டி அமைத்து திரு-பட்டினம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை போக்க புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

2. காரைக்கால் மாவட்டம் முழுவதுமுள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர், அதுபோல் மழை காலங்களில் மழை நீரும் தேங்கி நிற்கிறது, ஆகவே அனைத்து சாலைகளையும் சீரமைக்க புதுச்சேரி அரசு உரிய நிதியை ஒதுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

3. காரைக்கால் மாவட்டம் முழுவதும் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல், குப்பைகள் அல்லாமலும் உள்ளதால் மாவட்டம் முழுவதும் சுகாதாரம் சீர்கெட்ட நிலையில் உள்ளது. தனியாரிடம் சுத்தம் செய்யும் பணியை கொடுத்தும் சுகாதாரம் சீர்கெட்ட நிலையிலேயே உள்ளது. ஆகவே, தனியாரிடம் குப்பைகள் அள்ளும் பணியை ஒதுக்கி அதிக நிதியை செலவு செய்வதை தவிர்த்து, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் காலியாக உள்ள சுகாதார பணியாளர்களை நியமிக்க புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

4. மக்களால் தேர்வு செய்யப்பட புதுச்சேரி அரசை செயல்படவிடாமல் பல்வேறு வகைகளில் மக்கள் நல பணிகள் மற்றும் மத்திய அரசின் நிதியை தடுக்கும் கவர்னர் கிரண்பேடியின் நடவடிக்கையை இப்பொதுக்கூட்டம் கண்டிப்பதுடன், ஸ்வச் பாரத் என்ற பெயரில் கல்லூரி மாணவ மாணவிகளை குப்பைகள் அள்ளவும், விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பேரணி செல்லவும் பயன்படுத்தி மாணவர்களின் படிப்பை தடுக்கும் கவர்னர் கிரண்பேடியின் செயலையும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கிறோம். மேலும், கவர்னர் கிரண்பேடி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.

5. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வக்ப் சொத்துக்கள் தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள நிலையில் அது சம்பந்தமாக பலமுறை அரசுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி அரசை கண்டிப்பதுடன், இனியும் காலந்தாழ்த்தாமல் வக்ப் சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

6. காரைக்கால் மாவட்டம் முழுவதும் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை, இது சம்பந்தமாக நாம் விசாரித்தபோது தேவையான மின் உபகரணங்கள் புதுச்சேரி அரசிடமிருந்து காரைக்காலுக்கு அனுப்பப்படுவதில்லை என தெரியவருகிறது. எனவே, காரைக்காலுக்கு உரிய தேவையான மின் உபகரணங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

7. காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு சித்தா - ஆயுர்வேதிக் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளையும், மருத்துவ உபகரங்களையும் வழங்கவும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை அனைத்து வசதிகளும் கொண்ட தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக மாற்ற வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

8. தேசிய  மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டுமென அளித்துள்ள நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும், வழிப்பாட்டு தளங்கள், குடியிருப்புகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சட்டத்திற்கு எதிராக மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்து வரும் புதுச்சேரி அரசின் செயலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், புதுச்சேரி மாநிலத்தில் பூரண மது விலக்கு கொண்டு வர இன்னும் வீ ரியத்துடன் ஜனநாயக ரீதியிலான மக்கள் எழுச்சி போராட்டங்களை முன்னெடுப்பது என மனிதநேய மக்கள் கட்சி உறுதி ஏற்று கொள்கிறது.

9. சமீபகாலமாக காரைக்கால் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் அதிகளவில் பூட்டை உடைத்து திருட்டுக்கள் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது, புதுச்சேரி அரசும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனமனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

10. மக்கள் நலனை பற்றி கவலைப்படாமல் வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் வரி, கடை உரிமம் வரி, தொழில் வரி, வீடு மற்றும் மனை விற்பனை வரி ஆகியவற்றை உயர்த்திய புதுச்சேரி அரசையும், GST என்ற பெயரில் மிக பெரிய அளவில் மக்களின் மீது மறைமுக போர் தொடுத்த மத்திய பிஜேபி அரசையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

Read more...

காரைக்காலில்....தமுமுக நிர்வாகி இல்ல திருமண விழா

காரைக்கால் நகர தமுமுக தலைவர் ஜெகபர் சாதிக் இல்ல திருமண விழா காரைக்காலில் நடைபெற்றது, மனிதநேய மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது திருமண உரை நிகழ்த்தினார், நிகழ்ச்சியில்  தமுமுக மாநில செயலாளர் M.S.அலாவுதீன், மமக மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன், மமக விவசாயிகள் அணி மாநில செயலாளர் முசாவுதீன், மமக காரைக்கால் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன், மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம், நாகை (தெற்கு) மாவட்ட தமுமுக செயலாளர் ஜபருல்லாஹ், நாகை (தெற்கு) மாவட்ட பொருளாளர் முஹம்மது நைனா, ஜித்தா மேற்கு மண்டல தமுமுக தலைவர் அப்துல் மஜீத் உட்பட கட்சி மற்றும் அமைப்பின் மாவட்ட, நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read more...

காரைக்காலில்....மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட அலுவலகம் திறப்பு

காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலக திறப்பு நிகழ்ச்சி காரைக்காலில் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமை வகித்தார், தமுமுக மாநில செயலாளர் M.S.அலாவுதீன், மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன், மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.




 நிகழ்ச்சியில் நாகை (தெற்கு) மாவட்ட பொருளாளர் முஹம்மது நைனா, ஜித்தா மேற்கு மண்டல தமுமுக தலைவர் அப்துல் மஜீத், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஹம்மது மாசிம், தமுமுக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மெய்தீன், இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் ஹாஜா நஜிமுதீன், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன்,  விளையாட்டு அணி மாவட்ட  செயலாளர் முஹம்மது சர்புதீன், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் @ முத்து, உட்பட நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






Read more...

Sunday, July 30, 2017

காரைக்காலில், மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

பீகாரில் அரசியல் ஜனநாயக படுகொலை
காரைக்காலில், மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி 

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லா இன்று (30.7.2017) காரைக்காலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், இச்சந்திப்பின்போது மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச் செயலாளர் ஹமீது, தமுமுக மாநில செயலாளர்கள் பேராசிரியர்.ஹாஜாகனி, எம்.எஸ்.அலாவுதீன், மமக மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன், மமக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஜெய்னுல்லாபுதீன், விவசாய அணி மாநில செயலாளர் முசாவுதீன், ஊடக பிரிவு மாநில செயலாளர் உஸ்மான், மாநில பொருளாளர் அல்தாப், மமக காரைக்கால் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த மமக தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது "பீகாரில் ஜனநாயக படுகொலை நடைபெற்றுள்ளது, 2015ம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மதசார்பற்ற மகா கூட்டணி அமைத்து, மக்களின் பெருவாரியான ஆதரவுடன் மதவாதத்திற்கு எதிராக லாலு, நிதிஷ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது, தற்பொழுது மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஊழல் என்ற பெயரை காரணம் காட்டி லாலு மற்றும் காங்கிரஸுடனுனா உறவை முறித்து கொண்ட நிதிஷ் குமார், மதவாதம் மற்றும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுள்ள கட்சியான பிஜேபி யுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளது பச்சை சந்தர்பவாதமாகும், மதவாதத்திற்கு எதிராக மக்களின் வாக்கை பெற்று, மதவாதிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருப்பது நிதிஷ் குமார் செய்த ஜனநாயக படுகொலையாகும். எனவே, நிதிஷ்குமார் ராஜினாமா செய்து விட்டு மக்களை சந்திக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

புதுச்சேரியில் மார்க் அடிப்படையில் சென்டாக் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்ய கலந்தாய்வு தேதி அறிவித்து, அதனை ரத்து செய்து, மீண்டும் அறிவித்து திடீரென கலந்தாய்வை நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து தற்பொழுது மீண்டும் நிறுத்தி வைத்திருப்பதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமா நீட் தேர்வு முறைதான். எனவே, புதுச்சேரி அரசு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் நீட் தேர்வு முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல், தடுத்து, பல்வேறு வகைகளில் மக்கள் நல பணிகள் மற்றும் மத்திய அரசின் நிதியை தடுக்கும் கவர்னர் கிரண்பேடி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

சமீபகாலமாக காரைக்காலில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால அடிப்படையில் புதுச்சேரி அரசும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காரைக்காலிலுருந்து பேரளம் வரை அறிவிக்கப்பட்ட ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மிக விரைவாக முடிக்க வேண்டும்.

காரைக்காலிலுருந்து திருக்கடையூர் வழியாக சீர்காழி வரை உள்ள ரயில் பாதை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

காரைக்காலிலுருந்து, தென் மாவட்டமான மதுரை, திருநெல்வேலி பகுதிக்கு புதிய விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும், தற்பொழுது காரைக்காலிலுருந்து கொச்சுவேலி வரை செல்லும் வாராந்திர விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.

Read more...
Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP