சேவைகள்
தமுமுகவின் ஆம்புலன்ஸ் தொடர்பு எண்கள்
ஆம்புலன்ஸ் தொடர்புக்கு
தமுமுக சிறுகுறிப்பு :-
தமுமுக என அழைக்கப்படும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு இயக்கமாகும். இது 1995 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 1ம் தேதி ஆர்வமுள்ள முஸ்லிம்கள் சிலரால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.
வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!
ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன. தனித்துவமிக்க போராட்டங்கள், தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம், அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம், லட்சிய உணர்வு கொண்ட ஊழியர்கள், இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம் - இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்! இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Read more...


