இஸ்லாம்
தொழுவதினால் ஏற்படும் நன்மைகள்
அல்லாஹ்வைத் தொழுவதினால் இம்மை, மறுமை இருவாழ்விலும் குவியும் ஏராளமான நன்மைளை கணக்கிட்டால் நம்மால் பட்டியலிட முடியாத அளவுக்கு அவைகள் நீண்டு கொண்டே செல்லும்.
இன்று நம்மில் பலர் தொழுகை விஷயத்தில் அலச்சியப்போக்கை கையாளுவதற்கு எது காரணமென்றுத் தெரியவில்லை ? ஒன்று அதனுடைய நன்மைகளைத் தெரியாமல் இருக்க வேண்டும், அல்லது தெரிந்துகொண்டு அதில் நம்பிக்கை இழந்து இருக்கவேண்டும், இல்லை என்றால் பட்டியலிட முடியாத அளவுக்கு நன்மைகளை குவிக்கக்கூடிய தொழுகை விஷயத்தில் அலச்சியமாக இருக்க முடியாது.
நம்மால் இயன்றவரை ஒரு நிணைவூட்டும் விதமாக தொழுவதினால் ஏற்படும் இம்மை,மறுமைப் பலன்களை எழுதுவோம்.
தொழுகையினுடைய அமல் என்பது பாங்கு ஒலிக்கத் தொடங்கியது முதல் தொடங்கி விடுகிறது.
பாங்கிற்கு பதிலளிப்பதால் ஏற்படும் இம்மை, மறுமைப் பலன்கள்.
தொழுகையாளிகளாகிய நாம் தொழுகைக்கான அழைப்பைக் கேட்கும்பொழுது அதற்காக பதில் கூறுகிறோம் அதற்கு நன்மை எழுதப்படுகிறது அத்துடன் அது நின்றுவிடாமல் இன்னும் தொடருகிறது.
பாங்கிற்கு பதில்கூறி முடித்தப்பின் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதுகிறோம் அவ்வாறு ஓதப்படும்பொழுது ஒருமுறை ஓதினால் ஓதுபவர் மீது அல்லாஹ் பத்துமுறை அருள்புரிகிறான் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.
ஒருமுறை ஓதுவதற்காக அல்லாஹ்வின் அருள்மழை பத்து அமுறை நம்மீது பொழிகிறதென்றால் அது சாதாரண விஷயமா ? இதைக் குறைத்து மதிப்பிட முடியுமா ? அல்லது இதற்கு ஒரு அளவுகோலை ஏற்படுத்திக் கொண்டு இந்தளவுக்கு நன்மை தான் இது என்று வறையருத்துக் கூறமுடியுமா ? அல்லாஹ்வின் அருள்மழை நம்மீது பொழிகிறதென்றால் அதற்கு அளவேக் கிடையாது எல்லையைத் தாண்டிய நன்மை அல்லவா இது. சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.
நாளை என்ன நடக்குமோ ? அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ ? என்ற பீதியிலும், அச்சத்திலும் இன்று உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம்கள் உறைந்துப் போய் இருப்பதற்கு காரணம் அல்லாஹ்வின் அருளை அடைந்து கொள்ளும் இலகுவான வழிகளை அடைத்துக் கொண்டது ஒருக் காரணமாகும்.
பாங்கிற்கு பதில் கூறிவிட்டு ஸலவாத் ஓதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அல்லாஹ்வின் அருள் நம்மீது இடைவிடாமல் இறங்கும் பொழுது அச்சமற்ற வாழ்வும், மனஅமைதியும் கிடைக்கும் இது உலக நன்மை. இது உலகில் வாழும்பொழுது ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவைப்படும் நன்மைகள்.
மறுமை நன்மை.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் ஓதி முடிந்ததும் அவர்களுக்காக சுவனத்தில் சங்கை மிகுந்த வசீலா எனும் உயர் பதவிக்காக பிரார்த்தனை செய்கிறோம், கண்மனி நாயகம்(ஸல்) அவர்கள் உலகில் வாழும்பொழுது அவர்களுக்காக என்று நம்மிடத்தில் எதையும் கேட்டதில்லை மாறாக நம்முடைய நேர்வழிக்காக அவர்களின் வசதியான வாழ்க்கையைத் துறந்து ஏழ்மையை தேர்வுசெய்து கொண்டார்கள் அப்படிப்பட்ட அருமை நாயகம்(ஸல்) அவர்கள் உலகில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது நம்மிடம் இந்த ஒன்றை மட்டுமேக் கேட்டார்கள் அதுவும் உலக வாழ்விற்காக அல்ல, மறுமையின் நிம்மதியான வாழ்வுக்காக பிரார்த்திக்கக் கூறினார்கள்.
அருமை நாயகம்(ஸல்) அவர்களுக்காக மறுமையில் வசீலா எனும் உயர் பதவிக்காக நாம் பிரார்த்திப்பதன் மூலமாக மறுமையில் நமக்கு மிகப்பெரியப் பரிசுக் காத்திருக்கிறது அந்தப் பரிசு மறுமையை உறுதியாக நம்பக் கூடியவர்களுக்கு மிகப்பெரியப் பாக்கியமிக்கதாக இருக்கும்.
அருமை நாயகம்(ஸல்) அவர்களின் வசீஸாவுக்காக அவர்களின் வேண்டுகோளை ஏற்று யார் உலகில் பாங்கின் அழைப்பொலிக்குப் பிறகு தொடர்ந்து பிரார்த்தித்து வந்தாரோ அவருக்காக எந்தப் பரிந்துறையும் பயன் தரமுடியாத இறுதித் தீர்ப்புநாளில் அல்லாஹ்விடம் அருமை நாயகம்(ஸல்) அவர்கள் பரிந்துறை செய்வதாக வாக்களித்துள்ளார்கள்.
இது எத்தனை நன்மைகள் என்று வரையறுத்துக் கூறமுடியாத எல்லையற்ற நன்மையாகும் காரணம் தகிக்கும் வெயிலில் ஒவ்வொருவரும் தன் வியர்வையிலேயே தான் மூழ்கிக் கொண்டிருக்கும் பொழுது வாய்கள் மூடப்பட்டு கால்களும், கைகளும் தனக்கெதிராக சாட்சியமாகிக்கொண்டிருக்கும் கடுமையான நேரத்தில் உதவிக்கான எந்த வழியுமில்லாத அந்த நேரத்தில் அருமை நாயகம்(ஸல்) அவர்கள் நமக்காக வல்ல இறைவனிடம் பரிந்துறை செய்வார்கள் என்றால் இது வiரையறுத்துக் கூறக்கூடிய நன்மையில் உள்ளதா ? இல்லவே இல்லை இது கணக்கிட முடியாத பொக்கிஷக் குவியல்களாகும்.
'நீங்கள் பாங்கோசையைக் கேட்டால் பாங்கு கூறுபவர் கூறுவதைப் போலவே கூறுங்கள். பிறகு என் மீது ஸலவாத் கூறுங்கள். என் மீது எவர் ஒரு முறை ஸலவாத் கூறுகிறாரோ அவர் மீது இறைவன் பத்து முறை அருள் புரிகிறான். சொர்க்கத்தில் வஸீலா எனும் ஓர் உயர்ந்த பதவி உள்ளது. அந்தப் பதவியை இறைவன் தன் அடியார்களில் ஒருவருக்குத் தான் வழங்க இருக்கிறான். அந்த ஒருவனாக நான் இருக்க விரும்புகிறேன். வஸீலா எனும் அந்தப் பதவி எனக்குக் கிடைக்க எவர் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 628
பாங்கொலிக்கு பதில் கொடுப்பதில் மட்டும் இத்தனை நன்மைகள் குவிந்து கிடக்கிறதென்றால் அண்ணல் அவர்கள் நமக்கு காட்டித்தந்த வழியில் தொழுது முடித்து பள்ளியை விட்டு வெளியேறும் போது நம்முடைய நன்மையின் எடை என்னவாக இருக்கும் ? என்பதை சிந்தித்தால் எந்த ஒரு பாங்கிற்கும் பதிலளித்து, ஸலவாத் ஓதி, வசீலாவுக்காகப் பிரார்த்திப்பதை தவற விட மாட்டோம்.
மேற்காணும் நன்மையின் பொக்கிஷங்களை மொத்தமாக அடைந்து கொள்வதற்கு தொழுகையாளிகளால் மட்டுமே முடியும். காரணம் தொழுகையாளிகளைத் தவிற தொழாதவருக்கு பாங்கொலியே கடுமையானதாக இருக்கும் பாங்கு சொல்லும் வரை பள்ளிவாசலுக்கு பக்கத்தில் நின்று கொண்டிருப்பவர் பாங்கொலியைக் கேட்டதும் தொழுகை முடியும் வரை பிற தொழுகையாளிகளின் கண்களில் படாதவாறு ஒளிவதற்கு இடத்தைத் தேடி ஓடிவிடுவார். வஸீலாவுக்கு பிரார்த்தித்தவர் கண்டிப்பாக தொழுகைக்கு வந்து விடுவார், வசீலாவுக்குப் பிரார்த்தித்து விட்டு தொழாமல் ஒளிய மாட்டார்.
இன்று தொழுகையாளிகளிலும் கூட சிலர் பாங்கு சொல்வதை ஒருப்பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை பாங்கு சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது பேச்சை நிருத்தாமல் தொடர்ந்து பேசிக் கோண்டே இருப்பதும், கடைகளில் நின்று பொருள்களை வாங்கிக் கொண்டிருப்பதுமாக இருக்கின்றனர். இது மறுமையில் அடையவிருக்கும் நன்மையை நாமேத் தடுத்துக் கொள்ளக்கூடாது.
பாங்கிற்கு பதில் சொல்லிவிட்டு, அதன் பிறகு ஸலவாத் ஓதிவிட்டு, அதன்பிறகு கீழ்காணுமாறு வசீலாவுக்காகப் பிரார்த்திக்க வேண்டும்.
அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவதித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதனில் வஸீல(த்)த வல்ஃபழீல(த்)த வப்அஸ்ஹு ம(க்)காம(ன்)ம் மஹ்மூதனில்லதீ வஅத்தஹ்
பொருள்: 'முழுமையான இந்த அழைப்புக்குரிய இறைவனே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும், சிறப்பையும் வழங்குவாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!' என்று யார் பாங்கோசை கேட்கும் போது கூறுவாரோ அவருக்கு மறுமையில் நாளில் என்னுடைய பரிந்துரை அவசியம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரீ 614
பாங்கிலிருந்து தொடங்கி தொழுவது முதல் தஸ்பீஹ், துஆ, சுன்னத் தொழுகை என்றுப் பள்ளியை விட்டு வெளியில் வரும்வரை தொழுகைக்கான அமல்கள் நீடிக்கின்றன. அவற்றை முழுமையாக நிறைவு செயது அதற்கான நற்கூலிகளை குறைவின்றி அறுவடை செய்துகொள்ளும் பாக்கியமிக்கவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்புரிவானாக !
2: 110. தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.
وَأَقِيمُواْ الصَّلاَةَ وَآتُواْ الزَّكَاةَ وَمَا تُقَدِّمُواْ لأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللّهِ إِنَّ اللّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ {110}
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
மேலும், நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து தடுப்பபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். 3:104
நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்
புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம். அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது. இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும்.
இறைவன் அருள்மறையில் கூறுகிறான். நபியே ! நீர் உன் மனைவி மார்களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர் களென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையோன் (அல் அஹ்ஜாப் 59) மேலும் கூறுகிறான். நபியே ! முஃமினான பெண்களிடம் நீர் கூறுவீராக ! அவர்கள் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்களின் வெட்கத்தலங்களைப் பேணிப் பாதுகாத்தும் கொள்ள வேண்டும் மேலும் தங்கள் அலங்காரத்தை அவற்றில் வெளியே தெரியக்கூடியதைத் தவிர (வேரெதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும். மேலும் அவர்கள் தங்களின் கணவரிடத்திலே தவிர தங்களின் அலங்காரத்தை வெளிப்படுத்த வேண்டாம். (அந்நூர் 31) மேலும் கூறுகிறான் (நபியின் மனைவியர்களே) நீங்கள் உங்களின் வீடுகளிலேயே தங்கி விடுங்கள். முன்னர் அறியாமைக் காலத்துப் பெண்கள் திரிந்ததைப்போன்று திரிந்து கொண்டிருக்காதீர்கள். (அல் அஹ்ஜாப் 33) மேலும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் நீங்கள் ஏதாவது ஒரு பொருளைக் கேட்பதாகயிருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். (அல் அஹ்ஜாப் 53) என்று விரிவாக நம்மிடம் பேசுகிறான்.
நிச்சயமாக இஸ்லாமியப் பெண்கள் தெரிந்திருக்க வேண்டிய அவசியமான கடமைகளில் உள்ள ஒன்றுதான் பர்தா அணிந்து கொள்வது. இஸ்லாம் மட்டுமே ஒரு குடும்பம் வீழ்ந்து சின்னாபின்னப் பட்டு சிதைந்து போகாமல் அதைப் பாதுகாப்பதின் மீது அக்கறை கொண்டுள்ளது. இயற்கைச் சூழ்நிலையை கேடு படுத்திடாமல் குடும்பங்கள் ஆரோக்கியமாகவும், சமுதாயம் தூய்மையாகவும் வாழ வேண்டும் என்பதற்காக இஸ்லாம் ஒழுக்கங்கள், நற்குணங்கள் என்ற உறுதிவாய்ந்த சுவரை எழுப்பியுள்ளது. காரணம் இஸ்லாம், குழப்பத்தின் பால் இழுத்துச் செல்லக்கூடியவற்றை தடுப்பதற்காக பர்தா என்ற திரையை ஏற்படுத்தியுள்ளது. ஆண்களும், பெண்களும் சந்திக்கும்போது தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளும்படியும் ஏவுகிறது. நிச்சயமாக அல்லாஹ் பெண்களை கண்ணியப்படுத்து வதற்காகவும், இழிவிலிருந்து அவளின் தன்மானத்தை தற்காத்துக் கொள்ளவும், மேலும் குழப்பவாதிகள் தீய எண்ணம் உடையவர்களின் கெடுதியைவிட்டும் பெண்களை தூரப்படுத்துவதற்காகவும், கண்ணியம், விலைமதிப்பு, மானம் மரியாதையை அறியாதவர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், அதே சமயம் விஷப் பார்வைகளுக்குக் காரணமான குழப்பத்தின் வாசலை அடைத்திடுவதற்குமே அல்லாஹ் பெண்களுக்கு பர்தாவை மார்க்க மாக்கியுள்ளான். என்பதை தெளிவாக விளங்க முடிகிறது. இதை விட்டு விட்டு இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் நீங்கி அந்நிய ஆடவருடன் கலந்துரையாடுவதை தடை செய்திருக்கின்றது என்று தவறாக விளங்கி தேவையில்லாத அறிவற்ற பிரச்சாரத்தை சில விஷமிகள் பரப்பி வந்தனர் வருகின்றனர். இஸ்லாம் பெண்களை ஆண்களை விட்டும் தூரப்படுத்தி அவர்களின் சுதந்திரத்தை பரித்து ஆணாதிக்கத்திற்கு கீழ்படிந்துதான் வாழவேண்டும் என்றெல்லாம் சிலர் பர்தா முறையை தவறாக விளங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், இன்று ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் யார் யாரெல்லாம் அப்பிரச்சாரங்களை செய்து வந்தார்களோ அவர்களே பர்தா முறையை வரவேற்று பெண்களுக்கு பாதுகாப்பு பர்தா என்ற திரைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் அனைத்துப் பெண்களின் நற்குணங்கள், குடும்ப அமைப்பு, சிறப்புக்கள் மற்றும் கண்ணியமான நடைமுறைகளை பாதுகாப்பதற்கும், குழப்பங்களையும் தவறான எண்ணங்களையும் தடுத்து நிறுத்துவதற்கும் இஸ்லாமிய சட்டங்கள் மட்டுமே சரியான வழிமுறைகளை வகுத்துத்தந்துள்ளது. நம்மைச் சீர்திருத்திக் கொள்வதுடன் சமூகத்தையும் சீர்திருத்தச் சொல்லும் மார்க்கம்தான் இஸ்லாம் என்பதை அவர்கள் மட்டுமல்ல அனைத்து சமூகமும் ஒப்புக்கொண்டுள்ளது. காரணம் குழப்பம் சூழ்ந்து பரவிக்கிடக்கும் இந்தக் காலத்தை விட குழப்பத்தின் பயம் வேறு எந்தக்காலத்தில் அதிகமாக இருக்கமுடியும் நல்லவர்கள் இறையச்சமுடையவர்களை விட பாவிகள் நிறைந்து போய் விட்டனர். கடைவீதிகளிலும் பல்வேறு இடங்களில் நின்றுகொண்டு தன் தவறான விஷப்பார்வையால் தன் கையில் வைத்திருக்கும் மொபைலின் மூலம் (செல்போன்) அன்றாட சமையல் தேவைக்காக காய்கறி மற்றும் மீன் இறைச்சி வாங்குவதற்காக பஜாருக்கு வரும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து அதை மற்றவர்களுக்கும் S.M.S.மூலமாகவும் E.மெயில், இண்டர்நெட் என அனுப்பி தான் ஒரு பகுத்தறிவு படைத்த மனிதன் என்பதையே மறந்து ஷைத்தானுக்கு வழிபட்டு மிருகத்தனமான செயல்களிலே ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இவ்விஷயத்தில் அல்லாஹ் கடுமையான எச்சரிக்கையை தருகின்றான். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின் பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான விரோதியாவான். நிச்சயமாக அவன் (ஷைத்தான்) தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப்பற்றி நீங்கல் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான். (அல்பகரா 168 மற்றும் 169) என்று இறைவன் கூறுகிறான்.
இவ்வாறான தவறான எண்ணம் கொண்ட விஷமிகளிடமிருந்து சமுதாயப் பெண்கள் பாதுகாப்புப் பெற்று கண்ணியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காகத்தான் பர்தாவை இஸ்லாம் மார்க்க மாக்கியுள்ளது.
எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே ஒழுக்கமும் நன்னடத்தையும் நமது உடலில் உள்ள உயிரையும் நாம் சுவாசிக்கும் சுவாசத்தையும் போன்றது. குர்ஆனிலும் நபி மொழியிலும் அல்லாஹ்வின் மார்க்கம் ஒரு வலுவான கட்டடத்திற்கு உதாரணமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாளிகையின் அடித்தளமாயிருப்பது ஈமான் என்றால் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள தூண்களும், சுவர்களும், மேற் கூரையுமே இஸ்லாமாகும். இஸ்லாம் என்ற மாளிகையை கட்டி எழுப்புவதற்கும் அதை உறுதியாய் எழிலுடன் நிலை நிறுத்துவதற்கும் தேவையான இரண்டு விஷயங்கள்தான் தக்வா எனும் இறையச்சம் இஹ்ஸான் எனும் ஒழுக்கமும் நன்னடத்தையுமாகும்.
இறைவன் அந் நஹ்ல் 128 வது வசனத்தில் எவர்கள் இறையச்சம் கொள்கிறார்களோ மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்று கூறுகிறான். எனவே அல்லாஹ் எனக்கும் உலக மக்கள் அனைவர்களுக்கும் ஒழுக்கமுள்ள நல்ல சிந்தனைகளை வழங்கி இறைவனுக்கும் இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் வழிபட்டு நடக்கும் பாக்கியத்தை வழங்கு வானாக ஆமீன் வஸ்ஸலாம்
Read more...