காரைக்காலில், மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
பீகாரில் அரசியல் ஜனநாயக படுகொலை
காரைக்காலில், மமக தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லா இன்று (30.7.2017) காரைக்காலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார், இச்சந்திப்பின்போது மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச் செயலாளர் ஹமீது, தமுமுக மாநில செயலாளர்கள் பேராசிரியர்.ஹாஜாகனி, எம்.எஸ்.அலாவுதீன், மமக மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன், மமக வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ஜெய்னுல்லாபுதீன், விவசாய அணி மாநில செயலாளர் முசாவுதீன், ஊடக பிரிவு மாநில செயலாளர் உஸ்மான், மாநில பொருளாளர் அல்தாப், மமக காரைக்கால் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த மமக தலைவர் ஜவாஹிருல்லா பேசும்போது "பீகாரில் ஜனநாயக படுகொலை நடைபெற்றுள்ளது, 2015ம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து மதசார்பற்ற மகா கூட்டணி அமைத்து, மக்களின் பெருவாரியான ஆதரவுடன் மதவாதத்திற்கு எதிராக லாலு, நிதிஷ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டது, தற்பொழுது மக்களின் உணர்வுகளுக்கு எதிராக ஊழல் என்ற பெயரை காரணம் காட்டி லாலு மற்றும் காங்கிரஸுடனுனா உறவை முறித்து கொண்ட நிதிஷ் குமார், மதவாதம் மற்றும் மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுள்ள கட்சியான பிஜேபி யுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்துள்ளது பச்சை சந்தர்பவாதமாகும், மதவாதத்திற்கு எதிராக மக்களின் வாக்கை பெற்று, மதவாதிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருப்பது நிதிஷ் குமார் செய்த ஜனநாயக படுகொலையாகும். எனவே, நிதிஷ்குமார் ராஜினாமா செய்து விட்டு மக்களை சந்திக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
புதுச்சேரியில் மார்க் அடிப்படையில் சென்டாக் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்ய கலந்தாய்வு தேதி அறிவித்து, அதனை ரத்து செய்து, மீண்டும் அறிவித்து திடீரென கலந்தாய்வை நடத்தி, மாணவர்களை தேர்வு செய்து தற்பொழுது மீண்டும் நிறுத்தி வைத்திருப்பதால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணமா நீட் தேர்வு முறைதான். எனவே, புதுச்சேரி அரசு மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் நீட் தேர்வு முறையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல், தடுத்து, பல்வேறு வகைகளில் மக்கள் நல பணிகள் மற்றும் மத்திய அரசின் நிதியை தடுக்கும் கவர்னர் கிரண்பேடி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
சமீபகாலமாக காரைக்காலில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க போர்க்கால அடிப்படையில் புதுச்சேரி அரசும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காரைக்காலிலுருந்து பேரளம் வரை அறிவிக்கப்பட்ட ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மிக விரைவாக முடிக்க வேண்டும்.
காரைக்காலிலுருந்து திருக்கடையூர் வழியாக சீர்காழி வரை உள்ள ரயில் பாதை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்.
காரைக்காலிலுருந்து, தென் மாவட்டமான மதுரை, திருநெல்வேலி பகுதிக்கு புதிய விரைவு ரயில் இயக்கப்பட வேண்டும், தற்பொழுது காரைக்காலிலுருந்து கொச்சுவேலி வரை செல்லும் வாராந்திர விரைவு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும்.


