திரு-பட்டினத்தில் ....மனிதநேய மக்கள் கட்சியின் சுதந்திர தின பொதுக்கூட்டம்
காரைக்கால்
மாவட்டம், திரு-பட்டினம் கிளை சார்பாக திரு-பட்டினத்தில் மனிதநேய மக்கள்
கட்சியின் சுதந்திர தின பொதுக்கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட
துணை செயலாளர் முஹம்மது ஆஷிக் தலைமை வகித்தார், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஹாஜா நஜிமுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார், ஜித்தா மேற்கு மண்டல தமுமுக தலைவர் அப்துல் மஜீத், மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம்,
மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மாசிம், தமுமுக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது
மெய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தியா எங்கள் தாய் நாடு - இஸ்லாம் எங்கள் வழிபாடு என்ற எழுச்சி பாடலை மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி பாடினார்.,
இந்தியா எங்கள் தாய் நாடு - இஸ்லாம் எங்கள் வழிபாடு என்ற எழுச்சி பாடலை மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி பாடினார்.,
மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை செய்யது
சுதந்திர இந்தியாவும், இன்றைய நிலையும் என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினார், தமுமுக மாநில செயலாளர் எம்.எஸ்.அலாவுதீன், மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது,
தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கிளை
செயலாளர் முஹம்மது தாரிக் நன்றியுரையாற்றினார், பொதுக்கூட்டத்திற்கான
ஏற்பாடுகளை கிளை பொருளாளர் அபூபக்கர், நிர்வாகிகள் ஹாஜா ஜெகபர் சாதிக்,
ஹாஜா ஷேக் அலாவுதீன், ரிஸ்வான், பவாஜ், ஜெகபர் சாதிக், முஹம்மது நஜீர்,
அன்வர் ஹுசைன், அமீருதீன் ஆகியோர் செய்திருந்தனர்.
பொதுக்கூட்டத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் முஹம்மது நஜிமுதீன், விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சர்புதீன், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் @ முத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
1.
திரு-பட்டினத்தில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில்,
திரு-பட்டினம் பெரியப்பள்ளி அருகில் புதிய நீர் தேக்க தொட்டி அமைத்து
திரு-பட்டினம் பகுதி மக்களின் குடிநீர் தேவையை போக்க புதுச்சேரி அரசு
போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை
மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
2.
காரைக்கால் மாவட்டம் முழுவதுமுள்ள நகராட்சி மற்றும் கொம்யூன்
பஞ்சாயத்துக்குட்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், வாகனங்களில்
செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர், அதுபோல் மழை காலங்களில் மழை
நீரும் தேங்கி நிற்கிறது, ஆகவே அனைத்து சாலைகளையும் சீரமைக்க புதுச்சேரி
அரசு உரிய நிதியை ஒதுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை
மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.
3.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல்,
குப்பைகள் அல்லாமலும் உள்ளதால் மாவட்டம் முழுவதும் சுகாதாரம் சீர்கெட்ட
நிலையில் உள்ளது. தனியாரிடம் சுத்தம் செய்யும் பணியை கொடுத்தும் சுகாதாரம்
சீர்கெட்ட நிலையிலேயே உள்ளது. ஆகவே, தனியாரிடம் குப்பைகள் அள்ளும் பணியை
ஒதுக்கி அதிக நிதியை செலவு செய்வதை தவிர்த்து, நகராட்சி மற்றும் கொம்யூன்
பஞ்சாயத்துக்களில் காலியாக உள்ள சுகாதார பணியாளர்களை நியமிக்க புதுச்சேரி
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள்
கட்சி கேட்டு கொள்கிறது.
4.
மக்களால் தேர்வு செய்யப்பட புதுச்சேரி அரசை செயல்படவிடாமல் பல்வேறு
வகைகளில் மக்கள் நல பணிகள் மற்றும் மத்திய அரசின் நிதியை தடுக்கும் கவர்னர்
கிரண்பேடியின் நடவடிக்கையை இப்பொதுக்கூட்டம் கண்டிப்பதுடன், ஸ்வச் பாரத்
என்ற பெயரில் கல்லூரி மாணவ மாணவிகளை குப்பைகள் அள்ளவும், விழிப்புணர்வு
நிகழ்ச்சிக்கு பேரணி செல்லவும் பயன்படுத்தி மாணவர்களின் படிப்பை தடுக்கும்
கவர்னர் கிரண்பேடியின் செயலையும் இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக
கண்டிக்கிறோம். மேலும், கவர்னர்
கிரண்பேடி அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்பட
வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
5.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வக்ப் சொத்துக்கள் தனி நபர்களால்
ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள நிலையில் அது சம்பந்தமாக பலமுறை அரசுக்கு
தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத புதுச்சேரி அரசை கண்டிப்பதுடன், இனியும்
காலந்தாழ்த்தாமல் வக்ப் சொத்துக்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள்
கட்சி கேட்டு கொள்கிறது.
6.
காரைக்கால் மாவட்டம் முழுவதும் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை, இது
சம்பந்தமாக நாம் விசாரித்தபோது தேவையான மின் உபகரணங்கள் புதுச்சேரி
அரசிடமிருந்து காரைக்காலுக்கு அனுப்பப்படுவதில்லை என தெரியவருகிறது. எனவே,
காரைக்காலுக்கு உரிய தேவையான மின் உபகரணங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு
புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள்
கட்சி கேட்டு கொள்கிறது.
7.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும்
அரசு சித்தா - ஆயுர்வேதிக் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளையும்,
மருத்துவ உபகரங்களையும் வழங்கவும். காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை
அனைத்து வசதிகளும் கொண்ட தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக மாற்ற
வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள்
கட்சி கேட்டு கொள்கிறது.
9. சமீபகாலமாக காரைக்கால்
பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் அதிகளவில் பூட்டை உடைத்து
திருட்டுக்கள் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது, புதுச்சேரி அரசும்,
காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனமனிதநேய மக்கள்
கட்சி கேட்டு கொள்கிறது.
10. மக்கள் நலனை
பற்றி கவலைப்படாமல் வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் வரி, கடை உரிமம் வரி,
தொழில் வரி, வீடு மற்றும் மனை விற்பனை வரி ஆகியவற்றை உயர்த்திய புதுச்சேரி
அரசையும், GST என்ற பெயரில் மிக பெரிய அளவில் மக்களின் மீது மறைமுக போர்
தொடுத்த மத்திய பிஜேபி அரசையும் மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக
கண்டிக்கிறது.










