அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, October 8, 2017

தமுமுக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

காரைக்கால், நகரம் முழுவதும்

தமுமுக சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
++++++++++++++++
தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் டெங்கு காய்ச்சலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, அதில் நூற்றுக்கணக்கானோர் இறந்து வரும் நிலையில் சமூக சேவையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் தமுமுக டெங்கு வியாதியிலிருந்து மக்களை காக்க அக்டோபர் மாதத்தை டெங்கு ஒழிப்பு மாதமாக அறிவித்து, டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காரைக்கால் நகர தமுமுக சார்பாக, காரைக்கால் நகரத்திற்குட்பட்ட  வாராந்திர காய்கறி சந்தை மற்றும் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் முஹம்மது யூசுப் தலைமை வகித்தார், மாநில செயலாளர் அலாவுதீன், மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன், மமக மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். 3000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நகர பொருளாளர் முஹம்மது இக்பால் தலைமையில் மமக நகர துணை செயலாளர் அஷ்ரப் அலி உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மமக மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர் செய்யது புஹாரி, மருத்துவசேவை அணி மாவட்ட செயலாளர் முஹம்மது பயாஸ் தொண்டரணி மாவட்ட செயலாளர் யூசுப் என்ற முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP