அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, September 29, 2017

காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகம் தேர்வு

காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சிக்கு புதிய நிர்வாகம் தேர்வு

மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் நகர பொதுக்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் அப்துல் காசிம், தமுமுக மாவட்ட செயலாளர் கமால் ஹுசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி மாநில பொறுப்பாளர் அலாவுதீன் சிறப்பு  அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி மற்றும் இயக்க செயல்பாடுகள்  குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்து காரைக்கால் நகர புதிய நிர்வாகிகள் தேர்வை நடத்தினார்.

இக்கூட்டத்தில் ஹாஜா மெய்தீன் நகர தலைவராகவும், முஹம்மது  இப்ராஹிம் நகர செயலாளராகவும், முஹம்மது இக்பால் நகர பொருளாளராகவும், முஹம்மது யூசுப் தமுமுக நகர செயலாளராகவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர்கள் சாதிக் அலி, முஹம்மது மாசிம் , தமுமுக மாவட்ட துணை செயலாளர் முஹம்மது மெய்தீன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர்  முஹம்மது நஜிமுதீன், சுற்றுப்புற சூழல் அணி மாவட்ட செயலாளர்  செய்யது புஹாரி, விளையாட்டு அணி மாவட்ட  செயலாளர்  முஹம்மது சர்புதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது  பயாஸ், மாவட்ட தொண்டரணி செயலாளர்  யூசுப் என்ற முத்து ஆகியோர் உட்பட காரைக்கால் நகரத்திற்குட்பட்ட காரை மேற்கு, காரை கிழக்கு, எஸ்.ஏ.நகர் மற்றும் கோவில்பத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும், இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதென முடிவு செய்யப்பட்டது.

1. காரைக்கால் அரசு பொது மருத்துவமனையினை தரம் உயர்த்தவும், மருத்துவமனைக்கு தேவையான அளவு ஊழியர்களை நியமனம் செய்யவும், தேவையான மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் கையுருப்பில் வைத்திருக்கவும் வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

2. காரைக்கால் பகுதி மக்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ள இலவச அரிசியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

3. காரைக்கால் பகுதியில் சாலைகளில் திரியும் நாய்கள், மாடுகள் மற்றும் பன்றிகளால் சாலைகளில் செல்பவர்களுக்கு இடைஞ்சலாகவும், வாகனங்கள் விபத்திற்குள்ளாகுவதும், பல்வேறு வியாதிகளும் உருவாகின்றன. ஆகவே, நாய், மாடு மற்றும் பன்றிகளை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்வதுடன், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும், மனித நலனுக்கு எதிராகவும் நாய்களை பிடிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகளை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

4. புதுச்சேரி மின் துறையால் வீடுகள் மற்றும் கடைகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் மின் பட்டியலின் தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் மின் பட்டியலில் உள்ள கட்டணத்தை மின் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். ஆனால், காரைக்கால் மேற்கு பகுதியில் மட்டும் மின் பட்டியல் தேதியிலிருந்து 10 தினங்கள் கழித்து மின் கணக்கெடுத்து வீடுகளுக்கு மின் பட்டியல் வழங்குவதால், மின் பட்டியல் வழங்கிய 6 தினங்களுக்குள் மின் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாக்கப்படுகின்றனர். மேலும், ஒரு மாதம் கழித்து மின் பட்டியல் எடுப்பதால் மின் அளவு அதிகமாகி, மின் தொகையும் அதிகமாகிறது. மக்களை பற்றி சிந்திக்காமல், அலட்சிய போக்குடன் செயல்படும் மின் துறையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

5. வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள மின் மீட்டர் பழுதாகினால், அதனை மின் கணக்கெடுப்பாளர் கணக்கெடுத்து, மின் அலுவலகத்தில் தெரிவித்து மின் துறையே நேரடியாக ஓடாத மீட்டர்களை மாற்ற வேண்டும், ஆனால், மின்துறை நிர்வாகம் அப்பணியை செய்யாமல் மக்களையே மின் மீட்டர் ஓடவில்லை என புகார் மனு கொடுக்க வற்புறுத்துவதை கண்டிப்பதுடன், மின் மீட்டர்களை தேவையான அளவு காரைக்கால் பகுதிக்கு வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

6. புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அரசு துறைகளின் அனைத்து திட்டங்களும் முழுமையாக கணினிப்படுத்தப்பட்டு விட்டதாக அரசு அறிவித்து வரும் வேலையிலும், புதுச்சேரி மாநிலத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் வழங்கப்படும் அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் ஆன்லைனில் வழங்கப்பட்டு வரும் நிலையில் காரைக்கால் நகராட்சியில் மட்டும் 1970 வருடத்திற்கு முன்புள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் ஆன்லைனில் வழங்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டுவதுடன், உடனடியாக காரைக்கால் நகராட்சியில் அனைத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளையும் ஆன்லைனில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP