அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, April 14, 2009

காரைக்கால்: நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்
காரைக்கால் நகரப் பகுதிகளில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கடந்த மூன்று ஆண்டு காலமாக காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் தமுமுக கோரிக்கை வைத்து வந்தது. அதில் ஒருசில கோரிக்கைகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. ஆனால் பல்வேறு கோரிக் கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மக்கள் வரிப்பணத்தை பொழுது போக்கிற்காகவும், ஆடம்பர செலவிற்காகவும் வீணடித்துக்கொண்டு பொது மக்கள் பிரச்சினையை தீர்த்து வைக்கா மல் செயல்பட்டுவரும் காரைக்கால் மாவட்ட ஆட்சியரின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காரைக் கால் நகர தமுமுக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக காரைக்கால் நகரத் தலைவர் சபுருத்தீன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது ரியாஸ், நகர பொருளாளர் ஹாஜா மெய்தீன், மேற்கு கிளை தலைவர் நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்டப் பொருளாளர் ஷாஜஹான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நகர செயலாளர் யூசுப்கான் நன்றியுரை கூறினார்

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP