அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, September 10, 2009

திருவாரூர், காரைக்கால், தஞ்சையில் மாவட்ட மாநாடுகள்!ம.ம.க. மண்டல ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

மனிதநேய மக்கள் கட்சியின் சோழ மண்டல ஆலோசனைக் கூட்டம் செப்.5 அன்று திருவாரூரில் நடைபெற்றது. கட்சியின் துணைப் பொதுச் செயலாள ரும், மண்டல பொறுப்பாளருமான எம். தமிமுன் அன்சாரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், தஞ்சை (தெற்கு), தஞ்சை (வடக்கு), திருவாரூர், நாகை (தெற்கு), காரைக்கால் மாவட்ட ம.ம.க. நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களாக மேற்கண்ட மாவட்டங் களின் தமுமுக தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதில் மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாடு கள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அக்டோபர் மாதத்தை தீவிர உறுப்பினர் சேர்ப்பு மாதமாக அறிவித்து ஆயிரக்கணக்கானோரை கட்சியில் இணைப்பது என்றும், ஜமாஅத்தினர், அரசியல் அனுபவம் கொண்டவர்கள், பிற சமூக இளைஞர்கள் என சகலரையும் பொறுப்பில் அமர்த்துவது என்றும் விவாதிக்கப்பட்டு அதற்கான இறுதி வடிவமும் கொடுக்கப்பட்டது.
செப்டம்டர் மாதம் முழுவதும் கிளை அமைப்புகளை உருவாக்கி ஒன்றியம் மற்றும் தொகுதி வாரியாக கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அப்போது 2011ல் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்து சோழ மண்டலத்தில் தொகுதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற கருத்துகள் மாவட்ட நிர்வாகி களால் முன் வைக்கப்பட்டது.
அதன்படி நாகை (தெற்கு) மாவட்டத்தில் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டத் தில் திருவாரூர், தஞ்சை (வடக்கு) மாவட்டத்தில் பாபநாசம், தஞ்சை (தெற்கு) மாவட்டத்தில் பட்டுக்கோட்டை தொகுதி களைக் குறிவைத்து கட்சியையும், பணிகளையும் முடுக்கிவிட வேண்டும் என்றும், புதுச்சேரி மாநிலத்தில் காரைக் கால் மண்டலத்தில் உள்ள திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுத்து கட்சிப் பணிகளை முடுக்கி விட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
எந்தக் கூட்டணியில் இடம்பெற்றா லும், ம.ம.க.வின் தேர்வு நிலை தொகுதி களாக இவைகளை அடையாளம் காட்ட வேண்டும் என்றும், இவற்றிலிருந்தே நமக்கான தொகுதிகளைப் பெறுவது என்றும் ஏகமனதாக முடிவு செய்யப் பட்டது.
சோழ மண்டலத்தில் கட்சிப் பணிகளுக்கு எழுச்சியூட்டும் வகையில் ம.ம.க.வின் முதல் மாவட்ட மாநாடு ஜனவரி 24, 2010 அன்று திருவாரூரில் நடத்துவது என்றும், மார்ச் மாதம் காரைக் கால் மாவட்டத்திலும், மே மாதத்தில் ஒருங்கிணைந்த தஞ்சை (தெற்குலி வடக்கு) மாவட்டங்களின் சார்பிலும் ம.ம.க.வின் மாவட்ட மாநாடுகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இம்முடிவுகள் கட்சித் தொண்டர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2010 ஆம் வருடத்திற்கான ம.ம.க.வின் எழுச்சிப் பயணம் தொடங்கி விட்டது!
2011 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய அரசியல் புரட்சிக்கு இம்மாநாடு கள் தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை (இறைவன் நாடினால்...).

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP