காரைக்காலில் லஞ்ச ஒழிப்புத் துறை முடக்கப்பட்டுள்ளது: தமுமுக
First Published : 10 Oct 2009 07:25:10 AM IST
Last Updated : 10 Oct 2009 10:36:37 AM இசட்

காரைக்கால், அக். 9: காரைக்காலில் முடக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையை சரியான வகையில் செயல்பட வைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமுமுக வலியுறுத்திள்ளது. காரைக்கால் மாவட்ட தமுமுக நிர்வாகக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் எம். ஷேக்அலாவுதீன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கான 2.5 சதவீத இட ஒதுக்கீட்டை மாநில அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் காரைக்கால் துறைமுகத்தில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை அளிக்க வேண்டும்; பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு, தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒருங்கிணைந்த சான்றிதழை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட செயலர் அப்துல்ரஹீம், பொருளாளர் ஷாஜகான், துணைத் தலைவர் யூசுப்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.