இலங்கை கடற்படையால் காரைக்கால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து ம.ம.க ஆர்ப்பாட்டம்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டுச்சேரி தொகுதி செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் லியாக்கத் அலி, தமுமுக மாவட்டச் செயலாளர் அப்துல் ரஹிம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட துணைச்செயலாளர் ஹாஜா நஜிமுதீன், அம்புரோஸ் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு, காசாக்குடி மேடு, கோட்டுச்சேரி மேடு, அக்கம்பேட்டை, காவிக்குப்பம், மண்டபத்தூர், கருக்களாச்சேரி, பட்டினச்சேரி, கீழவாஞ்சூரைச் சேர்ந்த மீனவர்களும் கலந்து கொண்டனர்.
