அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, December 7, 2009

முஸ்லிம் அமைப்புகள் காரைக்காலில் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 07,2009,00:00 IST


காரைக்கால் : பாபர் மசூதி இடிப்பு சம்மந்தமாக குற்றம் சாட் டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரைக்காலில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாபர் மசூதி இடிக்கப் பட்ட வழக்கை விரைந்து முடிக்க கோரியும், பாபர் மசூதி நிலத்தை முஸ்லிம்களிடம் ஓப்படைக்க வேண் டும், லிபரான் கமிஷன் குற்றம்சாட்டிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக காரைக்கால் மாவட்டம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஸ்லிம் மக்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார் பில் திருநள்ளார் சாலை பெரிய பள்ளி வாசலில் துவங்கிய பேரணி பாரதியார் சாலை வழியாக காரைக்கால் புதிய பஸ் நிறுத்தம் சென்று ஆர்ப் பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் யூசுப்கான் தலைமை தாங் கினார். பொருளாளர் ஷாஜகான் முன்னிலை வகித் தார். செயலாளர் அப்துல் ரஹீம், கழக பேச்சாளர் ஷமீம் அகமது கண்டன உரையாற்றினர். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லியாகத்

அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் மெய்தீன், அப்துல்காசிம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்ட அலுவலகத்தில் துவங்கிய பேரணி அரசலாற்று பாலம் வரை சென்றது. சிங்காரவேலர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகம்மது கவுஸ் தலைமை தாங்கினார். இப்ராஹீம் உமரி கண்டன உரையாற்றினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP