அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, October 12, 2010

காரைக்கால் நகர த.மு.மு.க மற்றும் ம.ம.க இணைந்த ஊழியர் கூட்டம்

காரைக்கால் நகர த.மு.மு.க மற்றும் ம.ம.க இணைந்த ஊழியர்  கூட்டம் இன்று 11-10-2010 மாலை 5மணிக்கு காரைக்கால் மீரா பள்ளி தோட்டத்தில் உள்ள த.மு.மு.க தொண்டர் அணி  செயலாளர் M.ஜியாவுதீன் இல்லத்தில் நடைபெற்றது  நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில்   சிறப்பு அழைப்பாலர்களாக த.மு.மு.க மாவட்ட தலைவர் M. ஷேக் அலாவுதீன், மற்றும் த.மு.மு.க மாவட்ட துணை  செயலாளர் H.அப்துல் காசிம், மாவட்ட துணை  தலைவர் S. யூசப் கான், மாவட்ட மாணவர் அணி செயலாளர் S.நியாஜ் அகமது, உட்பட மாவட்ட நகர வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் புதுச்சேரி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ROASTER வெளியிட முதல்வருக்கு த.மு.மு.க கடிதம் அனுப்பியதையும் மற்றும் புதுச்சேரி முஸ்லிம்களுக்கு காலக்கடன் வழங்குவதற்கு உள்ள அரசு ஊழியர் ஜாமீன் நிபந்தனையை நீக்கக்கோரி சமுக நல அமைச்சருக்கு த.மு.மு.க கடிதம் அனுப்பியதையும் மேலும் இவ் இரு கோரிக்கைகளையும் சேர்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP