தமுமுக - காரை நகர அன்பு நகர் கிளை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் காரைக்கால் நகர அன்பு நகர் கிளை சார்பாக அன்பு நகர் பகுதி முழுவதும் சாலைகள், சாக்கடைகள் மற்றும் பூங்கா சுத்தம் செய்யும் நிகழ்ச்சி அன்பு நகர் கிளை தலைவர் ஜெகபர் அலி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காரைக்கால் நகராட்சி ஆணையர் ராஜராஜன் வீராசாமி அவர்கள் கலந்து கொண்டு தமுமுகவினரின் சேவையை பாராட்டினார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் முஹமது நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் யூசுப்கான், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், நகர செயலாளர் சிக்கந்தர், நகர பொருளாளர் சபுருதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சுத்தம் செய்யும் சுகாதார பணியினை தமுமுக கிளை செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் கிளை மமக செயலாளர் ஹாஜா மைதீன், கிளை பொருளாளர் சர்புதீன், உறுப்பினர்கள் முஹமது அலாவுதீன், முஹமது பைசல், தவ்பிக் அலி, சாகுல் ஹமீது, அக்பர் சக்கரவர்த்தி, பைசல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


