அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, March 2, 2012

காரைக்கால் மு.வி.ச. உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்தை சீர்படுத்த வலியுறுத்தி த.மு.மு.க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்









காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்க உயர்நிலைப்பள்ளி நிர்வாகத்தை முற்றிலுமாக கலைத்து விட்டு புதிய நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும், மு.வி.ச பள்ளியில் உள்ள காலியான ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப வேண்டும், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை அமைக்க வேண்டும், பள்ளியின் சொத்துகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் த.மு.மு.க நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் நகர செயலாளர் முஹமது சிக்கந்தர் வரவேற்றார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட துணை தலைவர் நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், மெய்தீன், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் அப்துல் நாசர், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜா முஹமது, ஹசனுதீன், முஹமது ஜியாவுதீன்,  இக்பால், முஹமது கபீர், முஹமது ஹுசைன் சாதிக்,  முஹமது ஜியாவுதீன், ம.ம.க நகர செயலாளர் அப்துல்லாஹ், இஸ்லாமிய இளைஞர் பேரவை தலைவர் முஹமது அலி ஜின்னா, இஸ்லாமிய இளைஞர் பேரவை துணை தலைவர் யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் முஹமது நஜிமுதீன், ம.ம.க மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது, மாவட்ட பொருளாளர்  யூசுப்கான், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் சாதிக்  அலி   இஸ்லாமிய இளைஞர் பேரவை செயலாளர் ரிபாய்  என்ற  சாகுல்  ஹமீது  ஆகியோர்  கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்பாட்டத்திர்கான ஏற்பாடுகளை நகரம் மற்றும் நகர கிளை  நிர்வாகிகள் சாகுல் ஹமீது, முஹமது யாசின், முஹமது ஜாஹிதீன், சதாம் ஹுசைன், முஹமது ரியாஸ், ஜெகபர் அலி, தமீம் அன்சாரி, ஹாஜா மைதீன், சபுருதீன், ஜாகிர் ஹுசைன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர், முடிவில் நகர பொருளாளர் சபுருதீன் நன்றி கூறினார். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும், பெற்றோர்களும், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் J. அசோக்  குமார் அவர்களிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP