கருக்கன்குடியில் - இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம்
காரைக்கால் மாவட்டம் கருக்கன்குடி கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் சுகம் அக்குபஞ்சர் & ஆள்ட்டர்நேடிவ் கிளினிக் இணைந்து நடத்திய இலவச அக்குபஞ்சர் மருத்துவ முகாம் கருக்கன்குடியில் த.மு.மு.க கிளை தலைவர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கு வந்திருந்த அனைவரையும் மனிதநேய மக்கள் கட்சி கிளை செயலாளர் முஹமது பாசித் வரவேற்றார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் முஹமது நஜிமுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது, மாவட்ட பொருளாளர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ராஜா முஹமது, மாவட்ட தொண்டரணி அணி செயலாளர் முஹமது ஜியாவுதீன், காரை நகர தலைவர் ஜெகபர் சாதிக், ம.ம.க காரை நகர செயலாளர் அப்துல்லாஹ், அன்பு நகர் கிளை யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம் தமிழர் கட்சி மாவட்ட இணை அமைப்பாளர் இரா.சிவா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவ முகாமில் அக்குபஞ்சர் டாக்டர்கள் செய்யத் அஹ்மது, ஷேக் அலாவுதீன் ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் யாசர் அரபாத், சதாம் ஹுசைன், அஸ்லம், அப்துஸ் சக்கூர், முஹமது மஜ்ளிக், ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர், முடிவில் கிளை செயலாளர் அபூபக்கர் சித்திக் நன்றி கூறினார். இந்த இலவச மருத்துவ முகாமில் கருக்கன்குடி, வளத்தாமங்களம், தென்னங்குடி, பத்தகுடி, செருமாவிலங்கை தேனூர், ஆகிய ஊர்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து பயன் பெற்றனர்.