அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, September 17, 2012

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திய அமெரிக்க திரைப்படத்தை தடைசெய்யக்கோரி காரைக்காலில் த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம் .

முஸ்லிம்கள் தங்கள் உயிரைவிட மேலானதாக கருதிக் கொண்டிருக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மிகமோசமாக சித்தரித்து அமெரிக்காவை சேர்ந்த யூத பயங்கரவாதி சாம் பாசைல்.தயாரித்துள்ள திரைப்படத்தை தடை செய்யக்கோரியும், யூ டியூப் இணையதளத்தில் இருந்து அந்த ட்ரைலரை நீக்க கோரியும், அமெரிக்க அரசுக்கு இந்திய அரசு உடனடியாக தனது கண்டனத்தை தெரிவிக்க கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முஹமது நஜிமுதீன் தலைமை வகித்தார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட துணை தலைவர் நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், கழக பேச்சாளர் அபூ அஸ்லம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹமது மெய்தீன், ம.ம.க மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் நாசர், சாதிக் அலி, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ராஜா முஹமது, மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் முஹமது ஹசனுதீன், மாவட்ட உலமா அணி செயலாளர் முஹமது ஜியாவுதீன், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் முஹமது இக்பால், மாவட்ட மாணவர் அணி செயலாளர் முஹமது ஹுசைன் சாதிக், மாவட்ட தொண்டரணி அணி செயலாளர் முஹமது ஜியாவுதீன், மாவட்ட மனித உரிமை அணி செயலாளர் முஹமது கபீர், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க பொருளாளர் முஹமது இபுராஹீம், ம.ம.க நகர செயலாளர் அப்துல்லாஹ், நகர பொருளாளர் சபுருதீன், நகரம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் திருபட்டினம் ஹாஜா ஷேக் அலாவுதீன், முகமது ஆசிக், நிரவி யூனுஸ், ஹமீது சுல்தான், கருக்கங்குடி முஹமது அன்சாரி, திருநள்ளார் முகமது கனி, வாஞ்சூர் அப்துல் காதர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முஹமது சிக்கந்தர் நன்றி கூறினார்..

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP