காரைக்காலில் - த.மு.மு.க ரத்த தான முகாம்
காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமணை இணைந்து நடத்திய ரத்த தான முகாம் காரைக்கால் S.A நகரில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் முஹமது நஜிமுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது, மாவட்ட பொருளாளர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹமது மெய்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் நாசர், சாதிக் அலி, மாவட்ட உலமா அணி செயலாளர் முஹமது ஜியாவுதீன்,மாவட்ட தொண்டரணி அணி செயலாளர் முஹமது ஜியாவுதீன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர், காரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் P.R.N.திருமுருகன்,காரைக்கால் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் P.அறிவுசெல்வம், அரசு சமாதான கமிட்டி உறுப்பினர் Y.இஸ்மாயில், த.மு.மு.க மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் M.ஷேக் அலாவுதீன்,S.A.நகர் குடியிருப்புவாசிகள் நல சங்க தலைவர் அப்துல் கரீம், ஆடிட்டர் சாகுல் ஹமீது ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அரசு பொது மருத்துவமணை கண்காணிப்பாளர் கந்தசாமி உத்தரவின் பெயரில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி உதயகுமார், டாக்டர் சேதுராமன், இரத்த வங்கி ஊழியர் காந்தி,செவிலியர் லலிதா ஆகியோர் ரத்த சேகரிப்பு செய்தனர், இம்முகாமில் 30 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ராஜா முஹமது தலைமையில் நகர செயலாளர் சிக்கந்தர், ம.ம.க நகர செயலாளர் அப்துல்லாஹ்,நகர பொருளாளர் சபுருதீன், S.A.நகர் கிளை தலைவர் சதாம் ஆகியோர் செய்திருந்தனர்.