அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, June 4, 2013

புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி காரைக்கால் (வடக்கு) தொகுதி மனிதநேய மக்கள் கட்சி - தெருமுனை கூட்டம்


புதுச்சேரி மாநிலத்தில் 50 முதல் 80 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ள  மின் கட்டணத்தை உடனே குறைக்க கோரியும்,
காரைக்காலில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை சரி செய்யக்கோரியும் காரைக்கால் (வடக்கு) தொகுதி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் புதிய பேருந்து நிலைய வாயிலில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. தெருமுனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், காரைக்கால் (வடக்கு) தொகுதி பொறுப்பாளருமான நெய்னா முஹம்மது தலைமை வகித்தார்,
தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.அலாவுதீன், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் H.அப்துல் காசிம்,  நகர பொருளாளர் சபுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தலைமை செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, நகர செயலாளர் அப்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். முடிவில் நகர தலைவர் S.K.ஜெகபர் சாதிக் நன்றி கூறினார்.   இந்த தெருமுனை கூட்டத்தில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் A. முஹம்மது ரியாஸ், மாவட்ட தொண்டரணி செயலாளர் A. முஹமது ஜியாவுதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது மெய்தீன், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் முஹம்மது ஹுசேன் சாதிக், நிர்வாக குழு உறுப்பினர் சிக்கந்தர்,  நிரவி கிளை தலைவர் யூனுஸ், திருபட்டினம் கிளை செயலாளர் ஹாஜா ஷேக் அலாவுதீன், ஆசிக்   மற்றும் ஏரளாமாநோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நகர செயற்குழு உறுப்பினர் புஹாரி, காரை மேற்கு கிளை தலைவர் இக்பால், முன்னாள் நிர்வாகிகள் அப்துல் கபூர், ஹாஜா மெய்தீன் உட்பட கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP