அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, December 23, 2009

முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதி கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுச்சேரி செய்திகள்


முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத இட ஒதுக்கீடு சமூக நீதி கூட்டத்தில் வலியுறுத்தல்

டிசம்பர் 23,2009,00:00 IST

புதுச்சேரி : புதுச்சேரி மிகவும் பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீடு பாதுகாப்புக் குழு சார்பில் முஸ்லிம்களுக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக் கீட்டை பாதுகாக்கக் கோரியும் சமூக நீதிக் கூட்டம் பிளிஸ் இன் அரங்கில் நேற்று நடந்தது.மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாறன் தலைமை தாங்கினார். கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் ஜெகன்நாதன் துவக்கவுரையாற்றினார். மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் அஷ்ரப், த.மு.மு.க., தலைவர் அப்துல் ரஜாக்கான், காரைக்கால் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி செயலாளர் லியாகத் அலி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, துணைச் செயலாளர் ஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், சிறுபான்மையின முஸ் லிம் மக்களுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படுவது போல், அவர்கள் எந்த பிரிவில் வருகிறார்களோ அந்தப் பிரிவிலேயே, பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் செய்துள்ள பரிந்துரையை ஏற்று 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உடனடியாக அரசாணை வெளியிட வேண்டும்.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து மீனவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட வேண்டும். பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP