அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, March 6, 2010

காரைக்கால் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து த.மு.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

 
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக காரைக்கால் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் காரைக்கால் நகராட்சி அலுவலகம் அருகில் காரைக்கால் த.மு.மு.க நகர செயலாளர் முஹம்மது நஜிமுதீன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், மொய்தீன் மாவட்ட அணி நிர்வாகிகள் நியாஜ் அஹமது, முஹம்மது ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ஷாஜஹான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் ஆரிபு, கழக பேச்சாளர் முஹம்மது ஹாஜி அலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. மாவட்ட செயலாளர் லியாக்கத் அலி, ஹாஜா நஜிதீன், நைனா முஹம்மது, அக்பர்ஷா, ஹசனுதீன், முஹம்மது ஷரிபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர், நகர தலைவர் ஜலாலுதீன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்காக ஏற்பாடுகளை நகர பகுதி நிர்வாகிகள் சதாம், தமீம், அசாருதீன், சர்புதீன், ஆசிக், புஹாரி, ஆரிபு, ஹசன், தவ்ஃபிக் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP