தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு
த.மு.மு.க மற்றும் ம.ம.க காரைக்கால் மாவட்ட கூட்டுப் பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட கூட்டுப் பொதுக்குழு கூட்டம் காரைக்கால் மாவட்ட த.மு.மு.க அலுவலகத்தில் மாநில செயலாளரும் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான K.முகமது கௌஸ் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் M.ஷேக் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். சமுதாய பணிகளும் இறையச்சமும் என்ற தலைப்பில் த.மு.மு.க தலைமை கழக பேச்சாளர் M. முகமது ஹாஜி அலி உரையாற்றினார். 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கிளை நிர்வாகிகள் முதல் தலைமை நிர்வாகிகள் வரையிலான தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருவதின் அடிப்படையில் காரைக்கால் மாவட்டத்திலும் உள்ள காரைக்கால் நகரம்,வார்டு மற்றும் கிளைகளுக்கு தேர்தல் முடிவுற்று இறுதியாக புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.
இதில் த.மு.மு.க மற்றும் ம.ம.க தலைவராக A. லியாகத் அலி, த.மு.மு.க செயலாளராக I. அப்துல் ரஹீம் , ம.ம.க செயலாளராக S.T.ஆரிப் மரைக்கார் , த.மு.மு.க மற்றும் ம.ம.க பொருளாளராக S. யூசுப் கான், த.மு.மு.க துணை தலைவராக B. ஷாஜஹான் , த.மு.மு.க துணை செயலாளராக A. முகமது தாரிக் மற்றும் K. மெய்தீன், ம.ம.க துணை செயலாளராக A. அப்துல் நாசர், M.A. ஹாஜா நஜிமுதீன் , த.மு.மு.க மாணவரணி செயலாளராக S. நியாஜ் அகமது , த.மு.மு.க மருத்துவ சேவை அணி செயலாளராக M. ஜியாவுதீன் , ம.ம.க இளைஜர் அணி செயலாளராக M. நெய்னா முகமது , த.மு.மு.க தொண்டர் அணி செயலாளராக H. அப்துல் காசிம் , த.மு.மு.க மனித உரிமை மற்றும் சுற்றுப்புற சுழல் அணி செயலாளராக E.M. சபுருதின் , மனிதநேய தொழிற்சங்க செயலாளராக H.M. இக்பால் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். இப்பொதுக் கூட்டத்தில் காரைக்கால் மாவட்ட த.மு.மு.க மற்றும் ம.ம.க பொதுக்குழு உறுப்பினர்கள் 93 பேர் கலந்து கொண்டனர். முடிவில் காரைக்கால் நகர த.மு.மு.க செயலாளர் M.முகமது நஜிமுதீன் நன்றி கூறினார்.