புதுச்சேரி மாநிலத்தில் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.
புனித ஹஜ் பயணத்திற்கு செல்லும் புதுச்சேரி மாநில இஸ்லாமியர்களுக்கு மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையில் 52 நபர்களுக்கு அரசு ஹஜ் கமிட்டி சார்பாக ஆண்டு தோறும் அனுமதி அளித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து 377 நபர்கள் வரை ஹஜ் பயணம் செய்ய ஹஜ் கமிட்டி சார்பாக அனுமதி அளித்து வந்துள்ளனர். அதனடிப்படையில் இந்த வருடமும் 307 இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் செல்வதற்காக விண்ணப்பம் அளித்துள்ளனர். ஆனால் மத்திய அரசு இந்த வருடம் மக்கள் தொகை அடிப்படையில் கோட்டாவில் உள்ள 52 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என அறிவித்து அதனடிப்படையில் மும்பையில் நடந்த குலுக்கலில் புதுச்சேரி மாநிலத்திற்கு 52 நபர்களை மட்டும் தேர்வு செய்து அதன் பட்டியலையும் அனுப்பி வைத்துள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் விண்ணப்பம் செய்துள்ள மீதமுள்ள 255 நபர்கள் இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்வது கேள்விக்குறியாக உள்ளது. கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த முறை தற்பொழுது மாற்றப்படுவது இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் ந.ரெங்கசாமி அவர்களும், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அவர்களும் இவ்விஷயத்தில் முழுமையாக தலையிட்டு மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஆண்டை போல் இவ்வருடமும் விண்ணப்பம் அளித்துள்ள 307 நபர்களுக்கும் ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் பயணம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
பத்திரிகை செய்தி
த.மு.மு.க காரைக்கால் மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம் வெளியிடும் பத்திரிகை அறிக்கை

