காரைக்கால் ரயில் போக்குவரத்தை உடனே துவக்க வலியுறுத்தி காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சி - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நாகூர்-காரைக்கால் வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் சுமார் ரூ.110 கோடியில் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு, அண்மையில் நிறைவடைந்துள்ளன. இப்பாதையில் கடந்த செப்டம்பர் மாதம் போக்குவரத்து தொடங்கப்படும் என்று, இப்பணியை ஆய்வு செய்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் K.H.முனியப்பா, மத்திய இணை அமைச்சர் V.நாராயணசாமி ஆகியோர் தெரிவித்தனர். ஆனால், ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஏதுவாக இதுவரை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்ளவில்லை. மேலும், போக்குவரத்து எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பையும் ரயில்வே நிர்வாகம் தெளிவாக இதுவரை வெளியிடவில்லை. திருச்சியில் உள்ள ரயில்வே நிர்வாகமும் காரைக்காலில் ரயில் போக்குவரத்துத் தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. புதுவை அரசும் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் ஆகியவையும் ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்க ரயில்வே நிர்வாகத்திடம் இதுவரை வலியுறுத்தவும் இல்லை. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் காணப்பட்டதைப் போன்ற மந்த நிலையே திட்டப்பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்குவதிலும் நிலவுகிறது. தனியார் துறைமுகமான மார்க்கிற்கு ரயில் சேவையை துவக்க காட்டிய வேகத்தை காரைக்கால் மக்களின் நலனுக்காக காட்டாத மத்திய மற்றும் புதுச்சேரி அரசின் செயல் காரைக்கால் மாவட்டத்தை புறக்கணிக்கும் விதமாகவே உள்ளது. எனவே, பாதுகாப்பு ஆணையர் ஆய்வுப் பணிகளை முடித்து ரயில் போக்குவரத்தை துவக்க வேண்டும் என வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டதிற்கு நகர தலைவர் H.முஹமது சிகந்தர் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் S.T.ஆரிப் மரைக்கார், மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் B.ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர், தலைமை செயற்குழு உறுப்பினர் S.P.முஹம்மது யுசுப், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் I.அப்துல் ரஹீம், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் M.R.சாதிக் அலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் M.நெய்னா முகமது, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் K.மெய்தீன், அணி செயலாளர்கள் E.M.சபுருதீன், S.நியாஜ் அஹமது, H.அப்துல் காசிம், நகர மற்றும் கிளை நிர்வாகிகள் M.முகமது சர்புதீன், J.ஹாஜா ஷேக் அலாவுதீன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் த.மு.மு.க நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன், நன்றி கூறினார்
