காரைக்காலில் மது ஒழிப்பு சமூக ஆர்வலர்கள் கூட்டம்
காரைக்காலில் மது ஒழிப்பு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு என்று அரசியல், ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றாக இணைந்து தொடங்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காரைக்கால் பகுதி முழுவதும் இக்கூட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக திருநள்ளார் கடை வீதியில் நடைபெற்ற கூட்டதில் த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம், த.மு.மு.க நகர செயலாளர் M.நஜிமுதீன் மற்றும் காரைக்காலை சார்ந்த அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.