அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, November 17, 2011

டிசம்பர் 6 - காரைக்காலில் - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 6

காரைக்காலில்

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனுவை மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிப்பது

த.மு.மு.க மாவட்ட நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு  


தமுமுக காரைக்கால் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 16.11.2011 அன்று மாவட்ட தலைவர் அ. லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது மாநில உலமா அணி செயலாளர் முகமது யூசுப், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அலாவுதீன் முன்னிலை வகித்தனர் இக்கூட்டத்தில் டிசம்பர் 6 சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு கீழ்கண்ட முடிவு எடுக்கப்பட்டது
டிசம்பர் 6 அன்று,

- பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து நீதி வழங்கக் கோரியும்,

- லிபர்ஹான் ஆணைய பரிந்துரையின்படி பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும்

த.மு.மு.க சார்பில் மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களில் "கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்" நடத்தப்படும் என்றும், ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனு மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் 15.11.2011 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி காரைக்கால் புதிய பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்" நடத்தப்பட்டு ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனுவை மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிப்பது 

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP