அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, November 25, 2011

காரைக்கால் நகராட்சியை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி கண்டன ஆர்பாட்டம்

காரைக்கால் நகர பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளால் ஏராளமான விபத்துகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கனகராஜ் என்ற ஆசிரியர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையில் நின்ற மாட்டின் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க கோரி பலமுறை அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை வைத்து வந்தும் அரசின் அலட்சியத்தால் ஒரு உயிர் பலி ஏற்பட்டு விட்டது. எனவே இனியும்அலட்சியம்காட்டாமல்சாலையில்திரியும்மாடுகளைபிடித்தும் மற்றும் மாடுகளை சாலைகளில் திரிய விடும் மாட்டின் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காரைக்கால் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பாக 24.11.2011 அன்று காரைக்கால் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்பாட்டத்திற்கு  மமக நகர தலைவர் மும்மது சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட பொருளாளர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர் அப்துல் நாசர், மாவட்ட நிர்வாக குழு உறுபினர் ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் S.P.முஹம்மது யூசுப் மற்றும் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அப்துல் ரஹீம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நகராட்சி உதவி பொறியாளர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர். முடிவில் நகர நிர்வாக குழு உறுப்பினர் நஜிமுதீன் நன்றி கூறினார். இந்த ஆர்பாட்டத்தில் சர்புதீன், ஜியாவுதீன், சாதிக், கியாசுதின் உட்பட ஏராமானோர் கலந்து கொண்டனர்


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP