தமுமுகவினர் ஜமாத்தார்கள் சந்திப்பு
பாப்ரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்க வலியுறுத்தி காரைக்காலில் நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஜமாஅத்தார்களுக்கு அனுப்பிய கடிதத்தை காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் வக்பு நிர்வாக சபை மற்றும் அனைத்து பள்ளி ஜமாத்தார்கள், திரு பட்டினம், நிரவி, அம்பகரத்தூர், சேத்தூர், நல்லம்பல், கருக்கங்குடி, திருநள்ளார், வாஞ்சூர் ஆகிய ஊர்களில் உள்ள ஜமாஅத் நிர்வாகிகளிடம் தலைவரின் கடிதத்தை கொடுத்து வரும் ஜும்ஆவில் அறிவிப்பு செய்யுமாறு மாவட்ட தலைவர் லியாகத் அலி தலைமையில் மாநில உலமா அணி செயலாளர் யூசுப் பைஜி, மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான், மமக நகர செயலாளர் அக்பர்சா, முன்னாள் மாவட்ட நிர்வாகி சாதிக் ஆகியோர் கொடுத்தனர்.