அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, December 6, 2011

டிசம்பர் 6 - காரைக்காலில் - கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

- பாப்ரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து நீதி வழங்கக் கோரியும்,
- லிபர்ஹான் ஆணைய பரிந்துரையின்படி பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும்

- மும்பை இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் என ஸ்ரீ கிருஷ்ணா கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மகராஷ்டிர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட கோரியும்.
காரைக்கால் மாவட்ட த.மு.மு.க சார்பில் டிசம்பர் 6 அன்று காலை 11 மணிக்கு மாவட்ட தலைவர் அ. லியாகத் அலி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷேக் அலாவுதீன், மாவட்ட பொருளாளர் யூசுப்கான், மாவட்ட துணை செயலாளர் மெய்தீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அப்துல் நாசர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் தாம்பரம் சலீம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், இ.கம்யூநிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் தங்கராசு, K.I.D.C இமாம் ஹாஜி அலி பிர்தௌசி, ஜியாவுதீன் பாகவி, திரு பட்டினம் இமாம் இஸ்மாயில், மாக்சிஸ்ட் லெனின் ஜெயபால், ஜாதி ஒழிப்பு முன்னணி தலைவர் ஆதி செல்லையா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அணி செயலாளர்கள் நெய்னா முஹமது, சாதிக் அலி, இக்பால், முஹமது ஜியாவுதீன், சபுருதீன், அப்துல் காசிம், நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் முஹமது சிக்கந்தர், முஹமது நஜிமுதீன், அக்பர்சா, ஹசனுதீன், முஹமது சர்புதீன், ஹாஜா நஜிமுதீன், ஹாஜா ஷேக் அலாவுதீன், ஜாஹிதீன், முஹமது ஹுசைன், முன்னால் மாவட்ட நிர்வாகிகள் செய்யத் அஹ்மத், ஜலாலுதீன், சாதிக், எஹ்யா மற்றும் எராளமான பெண்கள் உட்பட 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், முடிவில் மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான் நன்றியுரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தமுமுகவினர் வாகன ஊர்வலமாக சென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனுவை மாவட்ட நீதிபதி சுந்தரராசுவிடம் கொடுத்தனர். சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைக்கு வலு சேர்த்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP