அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, March 7, 2012

மேல வாஞ்சூர் கபறுஸ்தான் கொல்லைக்கு சுற்று சுவர் அமைக்காமல் காலதப்படுத்தும் திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்கால் மாவட்டம், வாஞ்சூர் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத் அலுவலகம் முன்பு மேல வாஞ்சூர் செய்யத் அலிஷா நகர் கபறுஸ்தான் கொல்லைக்கு சுற்று சுவர் அமைக்க வக்பு வாரியம் அனுமதி கொடுத்தும், திருபட்டினம் சட்டமன்ற உறுப்பினரும் காரைக்கால் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. வி.எம்.சி.சிவகுமார் அவர்கள் கபருஷ்தானுக்கு சுற்று சுவர் கட்ட நிதி கொடுத்து விட்டதாக கூறியும் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக சுற்று சுவர் அமைக்காமல் காலதப்படுத்தும் திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து கண்டன  ஆர்ப்பாட்டம் வாஞ்சூர் கிளை தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் திரு-பட்டினம் கிளை தலைவர் ஹாஜா ஷேக் அலாவுதீன் வரவேற்றார். மாவட்ட துணை தலைவர் நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், மெய்தீன், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் அப்துல் நாசர், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜா முஹமது, ஹசனுதீன், இக்பால், முஹமது ஹுசைன் சாதிக், முஹமது ஜியாவுதீன், த.மு.மு.க காரை நகர தலைவர் ஜெகபர் சாதிக், காரை நகர செயலாளர் முஹமது சிக்கந்தர் ம.ம.க காரை நகர செயலாளர் அப்துல்லாஹ், காரை நகர பொருளாளர் சபுருதீன் யூனுஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் முஹமது நஜிமுதீன், ம.ம.க மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது, மாவட்ட பொருளாளர்  யூசுப்கான், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் சாதிக்  அலி, இஸ்லாமிய  அழைப்பாளர்  முஹமது இஸ்மாயில் ஆகியோர்  கண்டன  உரை  நிகழ்த்தினர்.  ஆர்பாட்டத்திர்கான ஏற்பாடுகளை வாஞ்சூர் மற்றும் திரு-பட்டினம் கிளை  நிர்வாகிகள் ஷேக் இஸ்மாயில், முஹமது ஆஷிக், ஆஷிக் பஹ்ருதீன் ரிபாய், அப்துல் ரஹ்மான், பக்கீர் முஹமது  ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர், முடிவில்  வாஞ்சூர் கிளை செயலாளர் அப்துல் காதர் நன்றி கூறினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP