மனிதநேய மக்கள் கட்சி தெருமுனை பிரச்சாரம்
புதுச்சேரி மாநில 2011-12 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் உள்ள புதுச்சேரி அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி தெருமுனை பிரச்சாரம் புதுச்சேரி மாநில 2011-12 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட காரைக்கால் பகுதிக்குரிய பல்வேறு திட்டங்களான நேரு மார்க்கெட்டை இடித்து விட்டு புதிய அங்காடி கட்டுதல், காரைக்காலில் சிறப்பு மருத்துவமனை கட்டுதல், திருமளைராஜனார் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுதல், காரைக்கால் நகர பகுதியில் குடிநீர் குழாய்கள் போடப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவைகளை மாற்றி நகர் முழுவதும் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்தல், புதுத்துறை அருகில் ஆற்று நீரை சுத்தபடுத்தி குடிநீர் வழங்குதல், திருபட்டினம் போலகத்தில் வேதிப்பொருள் மற்றும் வாயு தீயணைப்பு வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைத்தல், சட்டமன்ற உறுப்பினர் நிதியை 2 கோடியாக உயர்த்துதல், போன்ற பல்வேறு திட்டங்களை ஒரு வருடங்களாகியும் நிறைவேற்ற முயற்சி எடுக்காமல் உள்ள புதுச்சேரி அரசை கண்டித்தும், காரைக்கால் மாவட்டத்தில் அரசு துறைகளில் உள்ள முக்கிய அதிகாரிகளான குடிமை பொருள் வழங்கு துறை மற்றும் உள்ளாட்சி துறை இணை இயக்குனர்கள், திருபட்டினம் மற்றும் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும், மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நாகூரிலிருந்து திருச்சி மற்றும் வேளாங்கண்ணி செல்லும் பாசஞ்சர் ரயில்களை உடனடியாக காரைக்காலிலிருந்து இயக்க வேண்டும், திருவாரூர் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு சரக்கு போக்குவரத்து ரயில்கள் சேவை தொடங்கப்பட்டு விட்டதால் காரைக்காலிலிருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவாரூர் - மயிலாடுதுறை வழியாக இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தெருமுனை பிரச்சாரம் நகர செயலாளர் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது, தமுமுக மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் யூசுப்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.யூசுப், மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம், மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த தெருமுனை பிரச்சாரத்தில் மாவட்ட நிர்வாகிகள் அப்துல் காசிம், ஹசனுதீன், ஜியாவுதீன், மற்றும் நகர நிர்வாகிகள் சிக்கந்தர், சாகுல் ஹமீது, யாசின், சதாம் ஹுசைன், அசாருதீன், இக்றான் உட்பட பலர் கலந்து கொண்டனர், முடிவில் நகர பொருளாளர் சபுருதீன், நன்றி கூறினார்.

