அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, May 23, 2012

மனிதநேய மக்கள் கட்சி - நிரவியில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு


மனிதநேய மக்கள் கட்சி

நிரவியில் புதிய கிளை நிர்வாகிகள் தேர்வு


மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்டம், நிரவி கிளை பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட செயலாளர் நெய்னா முகமது, தமுமுக மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் நாசர், சாதிக் அலி, மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன்,காரை நகர செயலாளர் அப்துல்லா, காரை நகர தமுமுக செயலாளர் சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் நிரவி கிளை தலைவராக யூனுஸ், கிளை செயலாளராக முகமது ஹனிபா, தமுமுக கிளை செயலாளராக ஹமீது சுல்தான், கிளை பொருளாளராக முகமது ரில்வான், கிளை துணை செயலர்களாக முகமது ஹாஷிம், சுஹைல் அஹமது, தமுமுக துணை செயலாளர்களாக புருஹானுதீன், ஷேக் தாவூத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்
1. நிரவி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக ஆற்று நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையால் நிரவியில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டியின் மூலம் குளிர் காலங்களான மூன்று மாதங்கள் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. மற்ற ஒன்பது மாதங்களும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதனை சரி செய்ய கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நிரவி ஆற்றங்கரையில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றிற்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளதால் நிரவி பகுதியில் குடிநீர் பிரச்சனை தொடர்கதையாக உள்ளது. எனவே புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஆழ்குழாய் கிணற்றிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

2. காலியாக உள்ள நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் மற்றும் நிரவி உதவி பதிவாளர் பதவிகளை உடனடியாக நிரப்ப புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

3. நிரவி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் சாலைகள் குப்பை தளங்களாகி வருகிறது. எனவே புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுத்து புதுச்சேரி, உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிகளுக்கு குப்பைகள் அல்ல தனி நிதி வழங்கியது போல் நிரவி கொம்யூன் பஞ்சாயத்திற்கு தனி நிதி வழங்க வேண்டுமென புதுச்சேரி அரசை மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP