காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் மாபெரும் கையெழுத்து இயக்கம்
காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்பும் பொது மக்களிடம் கையெழுத்து பெரும் மாபெரும் கையெழுத்து இயக்கம் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கியது. மாவட்ட செயலாளர் நெய்னா முகமது தலைமையில் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் முதல் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஒரு முதலுதவி ஆரம்ப சுகாதார நிலையமாகவே செயல்பட்டு வருவதால் அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் பாதிக்கப்பட் டு வருபவர்கள் தொடர்ந்து தஞ்சாவூர் அல்லது புதுச்சேரிக்கு அனுப்பப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் மற்றும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவில் ஸ்பெஷல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள CT Scan மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் செயல்படுத்த தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும், அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் புதுச் சேரி அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து கொண்டு இருக்கின்ற மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காமல் புதிதாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது. எனவே இருக்கின்ற காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்ப மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்து கையெழுத்து இயக்கத்தை காரைக்காலில் தொடங்கியுள்ளது இதன் தொடர்ச்சியாக காரைக்கால் பகுதியில் உள்ள அனைத்து கொம்யூன்களிலும் பொது மக்களிடம் கையெழுத்து பெற்று ஜனாதிபதிக்கு மனு அனுப்பப்படும். இந்த நிகழ்ச்சி யில் தமுமுக மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் தமுமுக மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்ட பொருளாளர் யூசுப்கான், மாவட்ட துணை தலைவர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் நாசர், சாதிக் அலி, தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், மெய்தீன், அணி செயலாளர்கள் ஹசனுதீன், முகமது ஜியாவுதீன், ராஜா முஹம்மத், முகமது ஹுசைன், இக்பால், ஜியாவுதீன் நகர நிர்வாகிகள் முகமது சாதிக், அப்துல்லாஹ், சிக்கந்தர், சபுருதீன், கிளை நிர்வாகிகள் ஹாஜா ஷேக் அலாவுதீன், யூனுஸ், ஹமீது சுல்தான், முகமது ரில்வான், புருஹானுதீன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அண்ணா ஹசாரே ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் டாக்டர். ஆனந்தகுமார் அவர்கள் ஆர்வமுடன் வந்து மனுவில் கையெழுத்திட்டார்.