10 ஆண்டாக நியமிக்காத வக்பு வாரியத்தலைவர் பதவியை புதுச்சேரி அரசு உடனே நியமிக்கவேண்டும்: மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ரிபாயி வலியுறுத்தல்.
கடந்த 10 ஆண்டாக வக்பு வாரியத்தலைவர் பதவியை புதுச்சேரி அரசு நியமிக்காதால், இஸ்லாமிய சொத்துக்கள் பராமரிப்பு இன்றி உள்ளது. எனவே வக்பு வாரியத்தலைவர் பதவியை உடனே நியமிக்க அரசு முன்வரவேண்டும் என மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ரிபாயி வலியுறுத்தியுள்ளார்.
காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த தலைவர் ரிபாயி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 வருடத்தில் 32 முறை பெட்ரோல் விலையை உயர்த்தியதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலையை உயர்த்தியது கடும் கண்டனத்தி...குரியது. இதனை ஏழை, எளிய மற்றும் நடுதர மக்கள் ஒருபோதும் ஏற்றுகொள்ளமாட்டார்கள் என்பதால் விலை உயர்வை மத்தியரசு உடனே வாபஸ் பெறவேண்டும்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை ஒரு முதலுதவி ஆரம்ப சுகாதார நிலையமாகவே செயல்பட்டு வருவதால் அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டு வருபவர்கள் தொடர்ந்து தஞ்சாவூர் அல்லது புதுச்சேரிக்கு அனுப்பப்படுவது தொடர்கதையாகி வருகிறது. எனவே காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள அனைத்து துறைகளுக்கும் தகுதி வாய்ந்த மருத்துவர்களையும் மற்றும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை பிரிவில் ஸ்பெஷல் மருத்துவர்களையும் நியமிக்க வேண்டும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் உள்ள CT Scan மற்றும் அனைத்து மருத்துவ உபகரணங்களையும் செயல்படுத்த தகுதி வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை நியமிக்க வேண்டும், அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் புதுச்சேரி அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து கொண்டு இருக்கின்ற மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காமல் புதிதாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது. எனவே இருக்கின்ற காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்ப மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்து கையெழுத்து இயக்கத்தை காரைக்காலில் தொடங்கியுள்ளது. காரைக்கால் மாவட்டம் முழுவதும் கையெழுத்து பெறப்பட்டவுடன், கையெழுத்துடன் கூடிய மனு ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்.
புதுச்சேரி மாநில 2011-12 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட காரைக்கால் பகுதிக்குரிய பல்வேறு திட்டங்களான நேரு மார்க்கெட்டை இடித்து விட்டு புதிய அங்காடி கட்டுதல், காரைக்காலில் சிறப்பு மருத்துவமனை கட்டுதல், திருமளைராஜனார் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுதல், காரைக்கால் நகர பகுதியில் குடிநீர் குழாய்கள் போடப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவைகளை மாற்றி நகர் முழுவதும் புதிய குடிநீர் குழாய்கள் அமைத்தல், புதுத்துறை அருகில் ஆற்று நீரை சுத்தபடுத்தி குடிநீர் வழங்குதல், திருபட்டினம் போலகத்தில் வேதிப்பொருள் மற்றும் வாயு தீயணைப்பு வசதிகளுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைத்தல் போன்றவற்றை புதுச்சேரி அரசு உடனடியாக நடைமுறைபடுத்த வேண்டும்.
புதுச்சேரி அரசு வக்பு வாரிய தலைவர் பதவி பல வருடங்களாக நிரப்பபடாமல் உள்ளதால் இஸ்லாமிய சொத்துக்கள் பராமரிப்பு இல்லாமல் இஸ்லாமிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே வக்பு வாரிய தலைவர் மற்றும் காரைக்கால் நகர காஜியார் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும்.
புதுச்சேரி அரசு அறிவித்துள்ள வாட் வரி விதிப்பினால் மக்கள் பயன் படுத்தும் பல பொருட்களின் விலைகள் ஏற்றப்பட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். எனவே மக்கள் பயன்பாட்டிற்கு உரிய பொருட்களின் மீது போடப்பட்டுள்ள வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்.
காரைக்கால் - நாகூர் அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பின் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. தற்பொழுது சென்னை மற்றும் எர்ணாகுளம் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் திருச்சியிலிருந்து நாகூர் வரை வரும் பாசஞ்சர் ரயில் மற்றும் வேலாங்கன்னியிளுருந்து நாகூர் வரை வரும் பாசஞ்சர் ரயில்கள் மே மாத இறுதிக்குள் காரைக்காளிளுருந்து இயக்கப்படும் அதுபோல் பெங்களூரிலிருந்து சேலம் வரை வரும் பாசஞ்சர் ரயில் காரைக்கால் வரை நீட்டிக்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயனச்சாமி அவர்கள் அறிவித்த நிலையில், திடீரென ரயில்வே நிர்வாகம் பெங்களூரிலிருந்து சேலம் வரை வரும் பாசஞ்சர் ரயில் நாகூர் வரை நீட்டிக்கப்படும் என அறிவித்திருப்பது காரைக்கால் பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் காரைக்காலில் ரயில்வே நிலைய பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார், எனவே திருச்சியிலிருந்து நாகூர் வரை வரும் பாசஞ்சர் ரயில் மற்றும் வேலாங்கன்னியிளுருந்து நாகூர் வரை வரும் பாசஞ்சர் ரயில் மற்றும் பெங்களூரிலிருந்து நாகூர் வரை வரும் பாசஞ்சர் ரயில்களை காரைக்கால் வரை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் காரைக்காளிளுருந்து சென்னை செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலை திருவாரூர் மயிலாடுதுறை வழியாக இயக்க வேண்டும்.
காரைக்காலில் மேற்கு புறவழி சாலை அமைக்க நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டு, புறவழி சாலை அமைக்க நிலங்களை கையகபடுத்துவதர்க்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிதியும் ஒதுக்கப்பட்டு, அந்த நிதி காரைக்கால் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆனால் நிலம் கையகபடுத்தும் பணியை துவக்க எதுவாக நிலா உரிமைதாரர்களுக்கு அதற்குண்டான தொகையை கொடுக்காமல் வருவாய் துறை காலதாமதம் செய்து வருவதால் காரைக்காலில் மேற்கு புறவழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கா வேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக புதுச்சேரியில் பதவியேற்கும் எந்த அரசாக இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கு 6 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்குவதாக கூறி கடைசியில் 2-யில் நிற்பதே வாடிக்கையாக போய்விட்டது. எனவே, புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் அரசு குறைந்தபட்சம் 5 சதவிகித இட ஒதுக்கீட்டையாவது நிறைவேற்ற முன்வரவேண்டும் என்றார். பேட்டியின் போது, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேக் அலாவுதீன், மாவட்ட தலைவர் அப்துல்ரஹீம், செயலர் நைனாமுகது, த.மு.மு.க செயலர் நஜிமுதின், சாதிக், சிக்கந்தர், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.