கருக்கங்குடியில் கையெழுத்து இயக்கம்
அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வலியுறுத்தி
கருக்கங்குடியில்
மனிதநேய மக்கள் கட்சி கையெழுத்து இயக்கம்
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையையாக மாற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால் புதுச்சேரி அரசு செவிடன் காதில் ஊதிய சங்காக இருந்து கொண்டு இருக்கின்ற மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காமல் புதிதாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க முயல்வது கண்டனத்திற்குரியது. எனவே இருக்கின்ற காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்ப காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்து கையெழுத்து இயக்கத்தை காரைக்கால் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும்
வேலையில் கருக்கன்குடி கிளை மனிதநேய மக்கள் கட்சி சார்பாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்ப பொது மக்களிடம் கையெழுத்து பெரும் இயக்கம் கருக்கன்குடியில் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ராஜா முகமது தலைமை வகித்தார், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட செயலாளர் நைனா முகமது, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ட்சியில் ஜமாஅத் நிர்வாகிகளும், ஊர் பெரியவர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருக்கங்குடி கிளை தலைவர் அன்சாரி, தமுமுக செயலாளர் அபூபக்கர், துணை தலைவர் சதாம் ஹூசைன் ஆகியோர் செய்திருந்தனர்.