அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, January 28, 2013

காரைக்கால் மாவட்ட எல்லையான வாஞ்சூரில் உடல்கள் அடக்கம் செய்யும் மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரி த.மு.மு.க சாலை மறியல்...

காரைக்கால் மாவட்ட எல்லையான வாஞ்சூரில் உடல்கள் அடக்கம் செய்யும் மயானத்துக்கு சுற்றுச்சுவர் கட்டக்கோரி சாலை மறியல்...



காரைக்காலை சேர்ந்த வாஞ்சூரில்,காரைக்கால்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் காரைக்கால் மாவட்ட த.மு.மு.க தலைவர் அப்துல் ரஹீம் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த சாலை மறியலில் காரைக்கால் மாவட்ட த.மு.மு.க. மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் நைனா முகம்மது,மாவட்ட பொருளாளர் யூசுப் கான்,திருபட்டினம் கிளை தலைவர் ஹாஜிவாப்பா,வாஞ்சூர் கிளை தலைவர் அப்துல்காதர், காரைக்கால் நகர தலைவர் சாதிக் மற்றும் நிர்வாகிகளும்,அப்பகுதி மக்களும் கலந்து கொண்டனர்.

இதனால் காரைக்கால்-நாகூர்,நாகப்பட்டினம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது...

...

போராட்டம் குறித்து மாவட்ட த.மு.மு.க தலைவர் அப்துல்ரஹீம் கூறும்பொழுது,காரைக்கால் மாவட்ட எல்லையான வாஞ்சூரில் அலிசா நகர் உள்ளது.இங்கு சுமார் 75க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதியில் மரணம் அடையும் முஸ்லிம் சமுதாயத்தினரின் உடல்களை அடக்கம் செய்யும் மயானத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாத காரணத்தினால் அங்கு அடக்கம் செய்பவர்களின் உடல்களை நாய்களும்,பன்றிகளும் வெளியில் இழுத்துபோட்டு குதறும் அவலநிலை நிலவி வருகிறது...

இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும்,திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.நாய்கள் மற்றும் பன்றிகளின் தொல்லைக்காக இப்பகுதியில் இறந்து போகும் முஸ்லிம் சமுதாயத்தினரின் உடல்களை அருகிலுள்ள நாகூருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அதாவது புதுச்சேரி பகுதியில் இறப்பவர்களின் உடல்கள் தமிழக பகுதியில் அடக்கம் செய்யப்படுகிறது. எனவே எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இந்த சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றார்...



சாலை மறியல் போராட்டம் பற்றி தகவலறிந்ததும் திரு-பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் வேலையன் மற்றும் திரு-பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தாமரைசெல்வன் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பேச்சுவார்த்தையின்போது வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சுற்றுச் சுவர் கட்டித்தருவதாக ஆணையர் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டனர்...





இந்த மறியல் போராட்டம் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP