இலங்கை கப்பல் வருகைக்கு எதிர்ப்பு: காரைக்காலில் ஆர்ப்பாட்டம்
வாஞ்சூர் தனியார் கப்பல் துறைமுகத்திற்கு வந்த இலங்கை கப்பலுக்கு அனுமதி அளித்த மத்திய அரசு, துறைமுக நிர்வாகத்தைக் கண்டித்து, காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியினர், துறைமுக வாயிலில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையை சேர்ந்த கப்பல் சரக்கு ஏற்றிச் செல்வதற்காக இந்த துறைமுகத்திற்கு செவ்வாய்க்கிழமை வந்தது. இத்தகவல் அறிந்து இக்கட்சியினர் துறைமுக வாயில் முன் திரண்டனர்.
குறிப்பாக, தனியார் துறைமுக நிர்வாகம் இதற்கான செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும். தொடருமேயானால், போராட்டத்தை வலுப்படுத்துவோம் என போராட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் கூறினர்.


