தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள்கட்சியின்காரைக்கால் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 17.03.2013 அன்று காரைக்கால் மாவட்ட தமுமுக அலுவலகத்தில் தமுமுக பொது செயலாளர் ப. அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளரும் காரைக்கால் மாவட்ட பொறுப்பாளருமான கே.ராவுத்தர்ஷா முன்னிலை வகித்தார். இப்பொதுக்குழு கூட்டத்தில் புதிய மாவட்ட தலைவராக எம்.எஸ்.அலாவுதீன்> மாவட்ட செயலாளராக இ. அப்துல் ரஹீம்> மனிதநேய மக்கள் கட்சிமாவட்ட செயலாளராக எம். நைனா முஹம்மது> மாவட்ட பொருளாளராக எஸ். ஹாஜா நஜிமுதீன்> மாவட்ட துணை தலைவராக எஸ்.யூசுப்கான், தமுமுக துணைசெயலாளர்களாக H.அப்துல் காசிம், M.முஹமது நஜிமுதீன், மமக துணைசெயலாளர்களாக A.அப்துல் நாசர், M.R.சாதிக் அலி, மாணவர் இந்தியா செயலாளர் - திருபட்டினம் M. முஹமது ஹுசைன் சாதிக், மருத்துவ சேவை அணி செயலாளர் A. முஹம்மது ரியாஸ், மருத்துவ சேவை அணி பொருளாளர் M. முஹமது ஜியாவுதீன், மனித உரிமை & சுற்றுப்புற சூழல் அணி செயலாளர் திருபட்டினம் U. முஹமது கபீர், தொண்டரணி செயலாளர் A. முஹமது ஜியாவுதீன், மனித உரிமை & சுற்றுப்புற சூழல் அணி பொருளாளர் - திருநள்ளார் I.முஹமது ஹுசைன், மனிதநேய தொழிற்சங்க செயலாளர் H.M.இக்பால், மனிதநேய வணிகர் சங்க செயலாளர் H.முஹமது ஹசனுதீன், இளைஞர் அணி செயலாளர் முஹம்மது மெய்தீன், மனிதநேய வணிகர் சங்கபொருளாளர் எஸ். முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.