அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, March 22, 2013

காரைக்கால் அம்மையார் உயர்நிலை பள்ளியில் பாத பூஜை நிகழ்ச்சி - நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு தமுமுக கோரிக்கை


                  காரைக்கால் அம்மையார் அரசு உதவி பெரும் உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத செல்வதற்கு முன்பு தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்வது கடந்த சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான இந்த பாத பூஜை செய்யும் செயலை அங்கு பயிலும் இஸ்லாமிய மாணவர்களும் கட்டாயம் செய்ய வேண்டுமென வற்புருத்தபடுகிரார்கள். அதனால் பெற்றோர்களும் வேறு வழியின்றி இந்த பாத பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மத சார்பற்ற ஒரு நாட்டில் ஒரு மதத்தின் சம்பிரதாய நிகழ்வுகளை மற்றொரு மதத்தினர் மீது கட்டாயம் செய்ய வேண்டுமென வலியுறுத்துவது கண்டிக்கத்தக்க செயலாகும். எனவே இந்த பாத பூஜை செய்யும் நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென கடந்த இரண்டு வருடங்களாக தமுமுக அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால் அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்ததால் இந்த வருடமும் அந்த கல்வி நிலையத்தில் பாத பூஜை செய்யும் நிகழ்வு நடைபெற்று அதில் இஸ்லாமிய மாணவர்களும் தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்த நிகழ்ச்சி  போட்டோவுடன் நாளிதழ்களில் செய்தியாக வெளிவந்துள்ளது. இது இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு பாத பூஜை நிகழ்ச்சியை தடை செய்து அம்மையார் அரசு உதவி பெரும் உயர்நிலை பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் தமுமுக புகார் மனு அளித்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP