புதுச்சேரி மாநில வக்பு வாரியத்திற்கு - த.மு.மு.க கோரிக்கை
காரைக்கால், பெரிய பள்ளிவாசல் மற்றும் மெய்தீன் பள்ளிவாசல் சுற்றிலும் சுகாதாரமாக வைத்திருக்கவும், வாசல் புறத்தில் போக்குவரத்தை சீர் செய்யவும், பிச்சைகாரர்களை முறைபடுத்தவும் ஆட்களை நியமிக்க வேண்டும்
புதுச்சேரி மாநில வக்பு வாரியத்திற்கு - த.மு.மு.க கோரிக்கை
காரைக்கால் நகர த.மு.மு.க தலைவர் S.K.ஜெகபர் சாதிக் புதுச்சேரி மாநில வக்பு வாரிய செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :
புதுச்சேரி மாநிலம் என்றாலே சாலை அழகு, சுகாதாரம் நிறைந்த மாநிலம் என்ற நிலை மாறி இன்று புதுச்சேரி மாநிலம் சுகாதாரமற்ற மாநிலமாகவே மாறிவருகிறது. இஸ்லாமிய சமூகம் பல விஷயங்களில் அரசுக்கும், மக்களுக்கும் முன்னுதாரணமாக இருந்த வரலாறும் உண்டு.
காரைக்கால் நகரின் மிக முக்கிய வரலாற்று பதிப்புகலாக உள்ள பெரிய பள்ளிவாசல் மற்றும் மெய்தீன் பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்களும் நகரின் மைய பகுதியில் இருந்து வருகிறது. மேற்கண்ட இரண்டு பள்ளிவாசல்களை சுற்றிலும் வக்பு வாரியத்தால் கடைகள் கட்டப்பட்டு அவைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது, அதன்மூலம் வருமானமும் வருகிறது. அந்த இரண்டு பள்ளிவாசல்களை சுற்றிலும் உள்ள சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமலும், குப்பைகள் நிறைந்தும் உள்ளதால் துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் பள்ளிவாசல் முன்பக்கம் பிச்சைகாரர்கள் வாசலை அடைத்துக்கொண்டு இருப்பதால் தொழ வருபவர்கள் உள்ளே செல்ல முடியாமல் திணறுகின்றனர், தொழ வருபவர்கள் கொண்டு வரும் வாகனங்களை முறையாக நிறுத்தாமல் சாலைகளை அடைத்து வாகனங்களை நிறுத்துவதால்
போக்குவரத்தும் தடைபட்டு விடுகிறது.
ஆகவே, காரைக்கால் பெரியபள்ளிவாசல் மற்றும் மெய்தீன் பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்களிலும், பள்ளிவாசல் சார்பாக சாக்கடை மற்றும் குப்பைகளை சுத்தம் செய்ய ஆட்களையும், அதுபோல் பள்ளிவாசல் வாசல் புறத்தில் போக்குவரத்தை சீர் செய்யவும், பிச்சைகாரர்களை முறைபடுத்தவும் ஆட்களை நியமிக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.
இதன்மூலம், நமது பள்ளிவாசல்களை சுற்றிலும் தூய்மையாக வைத்திருக்கவும், இது அரசுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.