அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, May 21, 2013

இந்தியா திரும்ப முடியாமல் வெளிநாட்டில் உள்ள காரைக்காலை சேர்ந்த பால்ராஜை மீட்க த.மு.மு.க நடவடிக்கை

காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் கொம்யூன், கண்ணாப்பூர் கிராமத்தை சேர்ந்த விஜயலெட்சுமி என்பவரின் கணவர் பால்ராஜ் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வளைகுடா  நாடுகளில் ஒன்றான ரியாத் நாட்டிற்கு சென்று இன்று வரை இந்தியா திரும்ப முடியாமல் ரியாத் நாட்டில் அவர் வேலை பார்க்கும் கம்பெனி உரிமையாளர் அவரை அடைத்து வைத்திருப்பதாகவும், எனவே  அவரது  கணவர்  பால்ராஜை  இந்தியா  அழைத்து  வர  இந்திய  அரசு  உதவி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அசோக்  குமார்  அவர்களிடம்  விஜயலெட்சுமி  மனு  ஒன்று  அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியதை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் எம்.எஸ்.அலாவுதீன் தலைமையில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் நாசர், சாதிக் அலி, நகர தலைவர் ஜகபர் சாதிக், காரை மேற்கு கிளை தலைவர் இக்பால் ஆகியோர் கன்னாப்பூரில் உள்ள விஜயலெட்சுமியின் வீட்டிற்கு சென்று நிகழ்வுகளை கேட்டறிந்து, அங்கிருந்து த.மு.மு.க தலைவர் ஜே.எஸ்.ரிபாய் அவர்களிடம் தொடர்பு கொண்டு பால்ராஜ் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப்படையில் த.மு.மு.க தலைவர் ஜே.எஸ்.ரிபாய் அவர்கள் ரியாத்தில் உள்ள த.மு.மு.க மண்டல நிர்வாகிகளிடம் பேசி பால்ராஜ் அவர்களை மீட்டு ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டு கொண்டார். அதன் பிறகு ரியாத்தில் உள்ள த.மு.மு.க மண்டல நிர்வாகிகள் பால்ராஜ் அவர்களை சந்தித்து விட்டதாகவும், மிக விரைவில் அவரை இந்தியாவிற்கு அனுப்பி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளுவதாகவும் த.மு.மு.க தலைவரிடம் தெரிவித்தனர்.
   

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP