ஜும் ஆ தொழுகை
காரைக்காலில் உள்ள பள்ளிவாசல்களில் ஜும் ஆ தொழுகையை மதியம் 1.30 க்குள் முடிக்க வக்பு நிர்வாக சபைக்கு த.மு.மு.க கோரிக்கை
காரைக்கால் வக்பு நிர்வாக சபைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காரைக்கால் நகர தலைவர் S.K.ஜெகபர் சாதிக் அனுப்பியுள்ள கடிதத்தில் :
காரைக்கால் பகுதியை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து ஏராளமான இஸ்லாமிய மாணவர்கள் காரைக்காலில் உள்ள கல்வி நிலையங்களில் கல்வி பயின்று வருகிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் இஸ்லாமியர்களின் முக்கிய தொழுகையான ஜும் ஆ தொழுகையை தொழுவதற்கு இஸ்லாமிய மாணவர்கள் அனைவர்களும் காரைக்காலில் உள்ள ஜும் ஆ பள்ளிகளில் தொழுக வருகிறார்கள். அந்த மாணவர்கள் ஜும் ஆ தொழுது விட்டு அதன் பிறகு சாப்பிட்டு விட்டு பள்ளிகூடத்திற்கு செல்ல வேண்டும். மதியம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரம் இரண்டு மணி. காரைக்காலில் உள்ள ஒரு சில பள்ளிவாசல்களில் ஒரு மணிக்கு தொழுகையை ஆரம்பித்து மதியம் 1.20 க்குள் தொழுகையை முடித்து விடுவதால் மாணவர்கள் 2 மணிக்குள் பள்ளிக்கூடம் செல்ல வசதியாக உள்ளது. ஆனால் ஒரு சில ஜும் ஆ பள்ளிவாசல்களில் 1.40 வரை தொழுகையை நீட்டிப்பதால் மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் காலதாமதமாகிறது, இதனால் பள்ளிகூடத்தில் அந்த மாணவர்களை சேர்க்காமல் வெளியே அனுப்பி விடுகிறார்கள். அதுபோல் சென்ற 05.04.2013 அன்று 5 நிமிடம் நேரமாகி விட்டதால் செயின்ட் மேரி உயர்நிலை பள்ளியில் பல மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் தற்போதைய உடல் நிலையில் பலர் மதியம் 1 மணிக்கெல்லாம் சாப்பிட வேண்டிய நிலையும் உள்ளது. தொழுகை நேரம் நீடிப்பதால் வயதானவர்களும் பாதிப்படைகிறார்கள். ஆகவே, ஜும் ஆ தொழுகையின் அனைத்து நிகழ்வுகைகளையும் மதியம் 1.30 க்குள் முடித்து கொள்ளும் வகையில் காரைக்கால் நகரில் உள்ள அனைத்து ஜும் ஆ பள்ளிகளுக்கும் தாங்கள் உத்தரவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டு கொள்கிறோம்.