நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி அரசு புதுச்சேரியில் தமிழ் திரைப்படங்களுக்கும் வரி விதிக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நெய்னா முஹம்மது வெளியிடும் பத்திரிக்கை செய்தி
புதுச்சேரி மாநிலம் தற்பொழுது மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மத்திய இணை அமைச்சர் நாராயனசாமி அவர்களுக்கும், புதுச்சேரி முதல் அமைச்சர் ரெங்கசாமி அவர்களுக்கும் இடையில் நடைபெறும் பனிப்போரில் சிக்கி தவிப்பது புதுச்சேரி மாநில மக்களே. நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் புதுச்சேரி அரசு சில தினங்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்காக நான்கு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது, அந்த நான்கு மாதங்களுக்கான பட்ஜெட்டை நிறைவேற்றவேண்டி பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் மக்களுக்கு தேவையான கட்டடங்கள், சாலைகள் போன்றவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளையும் , அதுபோல் மக்களுக்கு வழங்கவேண்டி பல்வேறு அரசு துறைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான நிதியை திரும்ப பெற்றுள்ள செயல் கண்டிக்கத்தக்கதாகும்.
நிதி நெருக்கடியை சமாளிக்க வீட்டு வரியை உயர்த்தியது, மின்சார வரியை 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தியது, பஸ் கட்டணத்தை உயர்த்தியது, சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத நிலையில் பால் விலையை 1 லிட்டருக்கு 2 ருபாய் உயர்த்தியது, வீடு மற்றும் நிலங்கள் வாங்குவதற்கான மதிப்பு கூட்டு வரியை உயர்த்தியது என சாமான்ய மக்களின் மீது வரியை சுமத்தி மக்களை கஷ்டபடுத்தி வரும் ரெங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு பணக்காரர்களுக்கு வேண்டிய பெட்ரோல் பங்கிற்கான வரியை வசூல் செய்யாமல் இருப்பது, அதுபோல் தமிழகத்தை பின்பற்றி தமிழ் படத்திற்கு வரிவிலக்கு என பணக்காரர்களுக்கு சலுகை செய்யும் அரசாகவே மாறி வருகிறது.
எனவே நிதி நெருக்கடியை சமாளிக்க புதுச்சேரி மாநிலத்தில் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி மாநில முதல்வர் ரெங்கசாமி அவர்களை மனிதநேய மக்கள் கேட்டு கொள்கிறது.
இவன்
(எம்.நெய்னா முஹம்மது)
மாவட்ட செயலாளர்