திருபட்டினம் பள்ளிவாசல் திறப்பு விழாவில் த.மு.மு.க வினர் சேவை
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் புதிய பள்ளிவாசல் திறப்புவிழா இன்று (31.05.2013) சிறப்பாக நடைபெற்றது முதல் நாள் இரவு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பள்ளிவாசல் நிர்வாக கமிட்டி கேட்டுகொண்டதற்கிணங்க
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் நூற்றுக்கணக்கான த.மு.மு.க மற்றும் ம.ம.க தொண்டர்கள் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து போக்குவரத்தை சரி செய்தனர், காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் பொறையார் பகுதி 3 த.மு.மு.க ஆம்புலன்சுகள் அவசர தேவைக்காக நிருத்தப்பட்டன. த.மு.மு.க வினர் உணவு பொட்டலங்கள் தயார் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர், மேலும் தொழுகைக்கு வருகை தந்தவர்களுக்கு உணவு பொட்டலங்களையும் பரிமாறினார். இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க காரைக்கால் மாவட்ட தலைவர் எம்.ஷேக் அலாவுதீன், த.மு.மு.க மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எம். நெய்னா முஹம்மது உட்பட நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
