காரைக்காலில் - இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்
காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சென்னை பில்ராத் மருத்துவமணை இணைந்து நடத்திய இலவச இருதய பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்கம் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் தலைமையில் நடைபெற்றது, மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், முகாமினை மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் துவக்கி வைத்தார், காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ .எம்.ஹெச்.நாஜீம், விநாயகா மிஷன் மருத்துவமணை கண்காணிப்பாளர் செய்யது மரூப் சாஹிப், மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கிதர் முஹம்மது, சமூக ஆர்வலர் முஹம்மது ஜாஹீர் ஹுசைன், சமூக ஆர்வலர் முஹம்மது ரிபாஸ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் நைனா முஹம்மது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். சென்னை பில்ராத் மருத்துவமணை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர். கே.தாமோதரன் அவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். ஈ.சீ.ஜி, இரத்த வகை கண்டறிதல், எக்கோ ஸ்கேன் ஆகியவைகள் இலவசமாக எடுக்கப்பட்டன, இம்முகாமில் 252 பேர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர், முகாமிலிருந்து 21 பேர் இருதய மேல் சிகிச்சைக்காக தேர்ந்து எடுக்கப்பட்தனர், தேர்ந்து எடுக்கப்பட்ட அனைவரும் மேல் சிகிச்சைக்காக த.மு.மு.க மூலம் சென்னை பில்ராத் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இந்த சிகிச்சை முகாமிற்கான ஏற்பாடுகளை நகர பொருளாளர் சபுருதீன், நகர துணை செயலாளர் புஹாரி, மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது மெய்தீன், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சாதிக் அலி, மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் முஹமது ஹசனுதீன், மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் முஹமது இக்பால், மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் ஜியாவுதீன், மேற்கு கிளை தலைவர் இக்பால், நகர செயலாளர் சிக்கந்தர், நகர துணை செயலாளர் ஷெரிப், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர், முடிவில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ் நன்றி கூறினார்



