காரைக்கால் அம்மையார் உயர்நிலை பள்ளியில் பாத பூஜை நடத்த தடை விதித்தது புதுச்சேரி அரசு - தமுமுக கோரிக்கை ஏற்பு
காரைக்கால் அம்மையார் அரசு உதவி பெரும் உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத செல்வதற்கு முன்பு தங்களது பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்வது கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான இந்த பாத பூஜை செய்யும் செயலை அங்கு பயிலும் இஸ்லாமிய மாணவர்களும் கட்டாயம் செய்ய வேண்டுமென வற்புறுத்தபடுகிறார்கள். அதனால் பெற்றோர்களும் வேறு வழியின்றி இந்த பாத பூஜையில் கலந்து கொள்கிறார்கள். மத சார்பற்ற ஒரு நாட்டில் ஒரு மதத்தின் சம்பிரதாய நிகழ்வுகளை மற்றொரு மதத்தினர் மீது கட்டாயம் செய்ய வேண்டுமென வலியுறுத்துவது கண்டிக்கத்தக்க செயலாகும். எனவே இந்த பாத பூஜை செய்யும் நிகழ்வை புதுச்சேரி அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென 17.03.2013 அன்று நடைபெற்ற காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பொதுகுழுவில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பியது, அதனடிப்படையில் நடவடிக்கை எடுத்த புதுச்சேரி கல்வி துறை காரைக்கால் அம்மையார் அரசு உதவி பெரும் உயர்நிலைபள்ளியில் பாத பூஜை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது, அந்த உத்தரவு நகலை த.மு.மு.க விற்கும் அனுப்பியுள்ளது. எல்லா புகழும் இறைவனுக்கே