ஜூலை 6 சென்னை பேரணியில் காரைக்காலில் இருந்து 200 பேர் கலந்து கொள்வது - த.மு.மு.க மாவட்ட செயற்குழுவில் முடிவு
காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது, தலைமை செயற்குழு உறுப்பினர் நைனா முஹம்மது, மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், செயற்குழு கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்துல் நாசர் மற்றும் சாதிக் அலி, மாவட்ட துணை செயலாளர் அப்துல் காசிம், மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜியாவுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முஹம்மது ரியாஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது மெய்தீன், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க செயலாளர் முஹமது ஹசனுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் ஜியாவுதீன், மாவட்ட மனிதநேய வர்த்தக சங்க பொருளாளர் முஹம்மது இப்ராஹிம், நகர தலைவர் ஜெகபர் சாதிக், நகர செயலாளர் சிக்கந்தர், நகர பொருளாளர் சபுருதீன், நகர துணை செயலாளர் புஹாரி, மேற்கு கிளை தலைவர் இக்பால், கிழக்கு கிளை தலைவர் செய்யது ஆரிப் ஷேக் அலாவுதீன், நிரவி கிளை தலைவர் யூனுஸ், கருக்கங்குடி கிளை தலைவர் ராஜா முஹம்மது, வாஞ்சூர் கிளை தலைவர் அப்துல் காதர், திருநள்ளார் கிளை செயலாளர் கனி, முன்னாள் மாவட்ட தலைவர் லியாகத் அலி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஜலாலுதீன், முன்னாள் நகர நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ஹாஜா மெய்தீன் உட்பட ஏராளாமான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தீர்மானங்கள்
1. 10 ஆண்டுகள் நிறைவு செய்த முஸ்லிகள் உள்ளிட்ட அனைத்து சிறைவாசிகளும் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட வேண்டும் உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் ஜூலை 6 அன்று த.மு.மு.க தலைமையில் லட்ச்சக்கணக்கில் முஸ்லிம்கள் அணிவகுக்கும் சென்னை கோட்டை நோக்கி நடக்கும் கோரிக்கை பேரணியில் காரைக்கால் மாவட்டத்திலிருந்து 200 பேர் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
2. பள்ளி படிப்பை முடித்து மேற்படிப்புக்காக செல்லும் மாணவர்கள் அலைச்சளில்லாமல் குடியுரிமை, குடியிருப்பு, ஜாதி மற்றும் வருவாய் சான்றிதழ்கள் வாங்கும் பொருட்டு கடந்த சில வருடங்களாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குடியுரிமை, குடியிருப்பு, ஜாதி மற்றும் வருவாய் சான்றிதழ் உள்ளடக்கிய நிரந்தர சான்றிதழ் (PIC) வழங்கப்பட்டு வந்தது. இதனால் மாணவ, மாணவிகள் அலைச்சளில்லாமல் PIC சான்றிதழை வைத்து மேற்படிப்புக்கு சென்றனர். ஆனால் சென்ற வருடம் ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு PIC சான்றிதழ் வழங்கப்படவில்லை. குறிப்பாக காரைக்கால் முஸ்லிம் வித்தியா சங்க உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. எனவே, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுத்து காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் PIC சான்றிதழ் வழங்க வேண்டுமென த.மு.மு.க கேட்டு கொள்கிறது.

3. காரைக்கால் நகரின் போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்த ஒரு சில பாதைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது, அதன்படி காமராஜ் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. சமீபகாலமாக புளியங்கொட்டை சாலையிலிருந்து காமராஜ் சாலை திரும்பும் வழியில் காவலர்கள் இல்லாததால் நான்கு சக்கர வாகனங்கள் ஒருவழிப்பாதையாக உள்ள காமராஜ் சாலையில் செல்வதால் அதிகளவு விபத்துகள் நடைபெறுகின்றன. எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து ஒருவழிப்பாதையாக உள்ள காமராஜ் சாலையில் செல்லும் நான்கு சக்கர வானங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காரைக்கால் நகர பகுதியில் வேகமாக செல்லும் தனியார் பேருந்துகள், சேர் ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென த.மு.மு.க கேட்டு கொள்கிறது.
4. புதுவை இந்து அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் புதுவை வக்ஃப் வாரியத்தை தனியாகப் பிரித்து வாரியத் தலைவரை நியமிக்கவும், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துக்கள் ஒரு சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக அறிய வருகிறது. எனவே புதுச்சேரி அரசு வக்பு வாரிய செயலாளருக்கு அதிகாரம் அளித்து வக்பு சொத்துகளை மீட்கவேண்டுமாய் த.மு.மு.க கேட்டு கொள்கிறது.
5. சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு அரசு வழங்கியுள்ள 2 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும், அதனை ஏ,பி,சி,டி என அனைத்து பிரிவிற்கும் பொருந்தும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என புதுச்சேரி அரசை த.மு.மு.க கேட்டு கொள்கிறது