ரமலான் மாதம் முழுவதும் சஹர் நேரத்தில் காரைக்கால் மாவட்டம் முழுவதும் குடிநீர் திறந்து விட வேண்டும் காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு தமுமுக கோரிக்கை
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் நாளது 10.07.2013 முதல் ஆரம்பமாகிறது, இந்த ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் விடியற்காலை எழுந்து உணவு சமைத்து, சாப்பிட்டு முஸ்லிம்களுக்கு கடமையான நோன்பு வைப்பது வழக்கமாக உள்ளதை தாங்கள் நன்கு அறிவீர்கள். இந்த ரமலான் மாதம் முழுவதும் விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை காரைக்கால் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் காரைக்கால், திருபட்டினம், நிரவி, திருநள்ளார், கருக்கங்குடி, சேத்தூர், நல்லம்பல் மற்றும் அம்பகரத்தூர் ஆகிய ஊர்களுக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கமாக உள்ளது.
அதுபோல், இந்த வருடமும் வரும் 10.07.2013 அன்று முதல் ரமலான் மாதம் முழுவதும் விடியற்காலை 3 மணி முதல் 5 மணி வரை காரைக்கால் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குடிநீர் திறந்துவிட பொதுப்பணித்துறை மற்றும் திருநள்ளார்,திருபட்டினம்,நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டுமென கடிதம் மூலம் தமுமுக கேட்டு கொண்டுள்ளது