அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, July 18, 2013

காரைக்காலில் வக்பு இடத்தை மீட்க போராட்டம்-

காரைக்கால் மாவட்டம், பிள்ளைத்தெருவாசல் அருகில் காரைக்கால் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான வக்பு வாரிய நிலம் 4 ஏக்கர் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டியுள்ள நிலத்தை உதயம் பில்டர்ஸ் என்ற தனியார் நிறுவனம் போட்டுள்ளார். அந்த பிளாட்டுக்கு சாலை அமைக்க, வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் மண் நிரப்பியுள்ளார்விபரம் அறிந்த காரைக்கால் வக்பு வாரிய நிர்வாகிகள், புதுச்சேரி தலைமை வக்பு வாரியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் அங்குள்ள மாவட்ட ஆட்சியர் தீபக்குமார் மூலம், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முத்தம்மாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்கள், காரைக்கால் தாசில்தாரை சம்பந்தபட்ட இடத்தில் ஆய்வு நடத்தும்படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்த இடத்தை ஆய்வு நடத்திய தாசில்தார் முத்தம்மாவிடம் அறிக்கை சமர்பிக்காமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே, வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் சாலை போடும் பணி ஆரம்பம் ஆனது, காரைக்கால் வக்பு வாரிய நிர்வாகிகள் (முத்தவல்லிகள்) சட்டப்படி அதனை தடுத்து நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காததால், அந்த தகவலை .மு.மு. மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவித்தனர், மேலும் இந்த செய்தி அனைத்து பள்ளிவாசல்களுக்கும் தெரிவிக்கப்பட்டது, நோன்பு திறந்தவுடன் முத்தவல்லிகள் தலைமையில் பிள்ளைதெருவாசல் பகுதிக்கு .மு.மு. வினர், ஜமாத்தார்கள் சென்றனர்தனியார் போட்ட சாலை அருகே நின்ற 3 டிப்பர் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, அங்கு வந்த காரைக்கால் நகர காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் .மு.மு. மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் மற்றும் முத்தவல்லிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்பேச்சு வார்த்தையில் வக்புக்கு சொந்தமான இடத்தில் சாலை போடுவதற்காக கொட்டப்பட்டுள்ள மண் மற்றும் ஜல்லிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்அப்புரப்படுத்தினால்தான் இந்த இடத்தை விட்டு களைவோம் என்று கூறினர். அதனை தொடர்ந்து,  சாலைக்காக ஆக்கிரமித்த நிலத்தை உடனே அகற்றவும்சாலைக்காக போட்ட மணலை உடனே அப்புறப்படுத்தவும் தனியார் நில உரிமையாளருக்கு காவல்துறை உத்தரவிட்டதை தொடர்ந்து மண் மற்றும் ஜல்லிகள் முற்றிலுமாக அப்புறப்படுத்தபட்டது, மண் மற்றும் ஜல்லிகள்முற்றிலுமாக அப்புறப்படுத்தபட்டதும் கூட்டம் கலைந்ததுஇரவு 7 மணிக்கு தொடங்கிய போராட்டம் நள்ளிரவு 1 மணி வரை நீடித்ததுஇதனிடையே அங்கு இருந்தவர்களுக்கு முத்தவல்லிகள் சார்பாக உணவு கொடுக்கப்பட்டது, மேலும் முத்தவல்லிகள் த.மு.மு.க வினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த வக்பு வாரிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கே.கோவிந்தராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுஇவர் காரைக்கால் நகரமைப்பு குழும தலைவராகவும்என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவராகவும் உள்ளார் எனபது குறுப்பிடத்தக்கதுஆளும் கட்சியில் இருந்துக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ள இவரின் இந்த செயலை கண்டித்து இவரின் பதவியை பறிக்க வலியுறித்தி காரைக்கால் மாவட்ட .மு.மு. தலைவர் ஷேக் அலாவுதீன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில் கூறியிருப்பதாவது


காரைக்கால் மாவட்டம், பிள்ளைதெருவாசல் பகுதியில் வக்புக்கு சொந்தமான இடத்தை காரைக்கால் பகுதியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவரும், காரைக்கால் நகர அமைப்பு குழும தலைவருமான கே.கோவிந்தராஜ் அபகரித்து உதயம் பில்டர்ஸ் பெயரில் பிளாட் போடுவது கண்டிக்கத்தக்க செயலாகும், பொறுப்பான ஒரு பதவியில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் சொத்துகளை அபகரிக்க முயல்வதை ஏற்று கொள்ள முடியாது.

எனவே, புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி காரைக்கால் நகர அமைப்பு குழும தலைவர் பதவியிலிருந்து கே.கோவிந்தராஜை உடனடியாக நீக்க வேண்டுமென்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டு கொள்கிறோம். மேலும், காரைக்கால் பகுதியில் உள்ள வக்பு சொத்துகளை மீட்க வக்பு நிர்வாக சபையினர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும்க்கும் .மு.மு. துணை நிற்கும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP