உ.பி யில் தனி நபர் தகராறை மதச்சாயம் பூசி அரசியல் ஆதாயம் தேடத்துடிக்கும் சமூக விரோதிகளை கண்டித்தும் .... மத்திய அரசும், உ.பி அரசும் பரவி வரும் கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும் காரைக்காலில் த.மு.மு.க - கண்டன ஆர்ப்பாட்டம்
உத்திரப்பிரதேசத்தில் முஸாபர் நகரில் இரண்டு கோஷ்டிகளுக்கு இடையில் நடந்த மோதல் கொலையை இரண்டு சமூகங்களுக்கு இடையிலான மோதலாக சித்தரித்து அரசியல் ஆதாயத்திற்கு அப்பாவி பொது மக்களை பலியாக்கி, பொதுச் சொத்துக்களை சூறையாடி வருபவர்களை கண்டித்தும், உ.பி.யில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் இதர சமூகத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும், வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கி வன்முறையாளர்களை ஒடுக்கி அனைத்து மக்களுக்குமான பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய மற்றும் உ.பி. மாநில அரசுகளை வலியுறுத்தி காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் S.K.ஜெகபர் சாதிக் தலைமை வகித்தார், மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட துணை தலைவர் யூசுப்கான், மாநில செயற்குழு உறுப்பினர் நெய்னா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் அப்துல் காசிம், முஹம்மது மெய்தீன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சாதிக் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மௌலவி ஹாஜி அலி பிர்தௌசி ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர பொருளாளர் சபுருதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் A. முஹம்மது ரியாஸ், மாவட்ட தொண்டரணி செயலாளர் A. முஹமது ஜியாவுதீன், மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளர் ஜியாவுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஹசனுதீன், முஹம்மது இக்பால், ஹாஜா மெய்தீன், முஹம்மது இப்ராஹிம், நகர துணை செயலாளர் முஹம்மது சுல்தான் செய்யது புஹாரி, நகர கிளை நிர்வாகிகள் இக்பால், கருக்கங்குடி ராஜா முஹம்மது, திருபட்டினம் முஹம்மது தாரிக், முஹம்மது கபீர், முஹம்மது ஆசிக், நிரவி யூனுஸ், திருநள்ளார் கனி, வாஞ்சூர் அப்துல் காதர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் முஹம்மது சிக்கந்தர் நன்றி கூறினார்.



